ம.இ.கா ஆதாரத்தோடுதான் பேசுகிறது- சிவசுப்ரமணியம் வெளிப்படை

ம.இ.கா ஆதாரத்தோடுதான் பேசுகிறது- சிவசுப்ரமணியம் வெளிப்படை

கோலாலம்பூர், செப். 11 –
அரசு பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற ஆதாரங்கள் மஇகாவிடம் இருப்பதாக ம.இ.கா ஊடகப் பிரிவுத் தலைவரும்,அக்கட்சியின் மத்திய செயலவை உறுப்பினருமான சிவசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

எஸ்டிபிஎம் மற்றும் மெட்ரிகுலேஷன் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தும், பல இந்திய மாணவர்களுக்கு அரசு பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்கவில்லை. குறிப்பாக அவர்கள் விண்ணப்பித்த துறைகளில் இடமளிக்கப்படவில்லை. இதே குற்றச்சாட்டை மஇகா உதவித் தலைவர் டத்தோ நெல்சனும் முன்பு முன்வைத்திருந்தார்.

“அரசாங்கம் எத்தனை விளக்கங்கள் கொடுத்தாலும் உண்மையில் தகுதியான மாணவர்களுக்கு இடம் கிடைப்பது இல்லை. மேலும், விண்ணப்பித்த துறைக்கு பதிலாக வேறு துறைகள் வழங்கப்பட்ட மாணவர்களின் பட்டியலும் எங்களிடம் உள்ளது,” என்று சிவசுப்ரமணியம் கடுமையாகக் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:
“ஒவ்வொரு ஆண்டும் விளக்கங்கள் அளிப்பதை நிறுத்தி, இதற்கான நிரந்தரத் தீர்வை அரசாங்கம் எடுக்க வேண்டும். அரசு பல்கலைக்கழக மாணவர் தேர்வு குழுவில் அனைத்து இனங்களும் இடம்பெற வேண்டும். அதற்காக UPU-வில் மறுசீரமைப்பு அவசியம். இதன் மூலம் தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் அரசு பல்கலைக்கழகங்களில் படிக்கும் வாய்ப்பு உறுதி செய்யப்படும்.” என்றார் சிவா.

பரிந்துரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

அண்மை

சிறந்த ஆசிரியர்கள்

அதிக கருத்து

காணொளிகள்

வகையினம்