மலேசியாவை வழிநடத்தப் பாஸ் தயார்- அடி அவாங் அடுத்த பிரதமரா?

மலேசியாவை வழிநடத்தப் பாஸ் தயார்- அடி அவாங் அடுத்த பிரதமரா?

கோலாலம்பூர், செப். 15 –
மலேசிய இஸ்லாமியக் கட்சி (பாஸ்) நாடு முழுவதையும் வழிநடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. எனினும், அந்தக் கட்சியின் தலைவர் தான்ஸ்ரீ ஹாடி அவாங், வயது மற்றும் உடல்நலக் காரணங்களால் தாம் இனி பிரதமராகும் தகுதி இல்லை எனத் திடமாகக் கூறினார்.

78 வயதான ஹாடி, எதிர்க்கட்சிகள் அடுத்த பொதுத் தேர்தலில் (GE16) வெற்றிபெற்றால், பெரிகாட்டான் நேஷனல் (PN) கூட்டணிக் கட்சித் தோழர்களுடன் கலந்தாலோசித்து பிரதமர் வேட்பாளரை முடிவு செய்வோம் எனக் குறிப்பிட்டார்.

“பிரதமரின் பொறுப்பு மிகப்பெரியது. அதனால் தான், சிலர் வெளிச்சத்தில் நிற்க விரும்பவில்லை,” என்று அவர் விளக்கினார்.

மடானி அரசை சாடல்

கடாவில் இன்று காலை நிகழ்ச்சியில் பேசிய ஹாடி, தற்போதைய அரசின் மடானி என்ற கருத்தை கடுமையாகத் தாக்கினார்.
“மடானி என்பது வெறும் கோஷம் மட்டுமே. வழிகாட்டலும், நோக்கும் இல்லாத அரசாங்கம், மலேசியர்களை ஏமாற்றுவதற்காகவே இந்த சொற்றொடரைப் பயன்படுத்துகிறது,” என்று அவர் விமர்சித்தார்.

மேலும், பாஸ் அரசாக வந்தாலும் முஸ்லீமல்லாதவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் எனவும் அவர் உறுதியளித்தார்.

முகிதீனுக்கு மீண்டும் வாய்ப்பு?

முன்னாள் பிரதமர் தான்ஸ்ரீ முகிதீன் யாசின், பெர்சாத்து கட்சியின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் GE16க்கான 11வது பிரதமர் வேட்பாளராக பெயரிடப்பட்டுள்ளார். முகிதீனுக்கு தற்போது வயது 78.

இந்தச் சூழலில், எதிர்க்கட்சியில் யார் பிரதமராக முன்னிலையில் நிற்பார்கள் என்பது மீண்டும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரிந்துரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

அண்மை

சிறந்த ஆசிரியர்கள்

அதிக கருத்து

காணொளிகள்

வகையினம்