ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 29 —நாட்டை உலுக்கிய புலனாய்வில், மூன்று மாநிலங்களில் பரவியிருந்த “டார்க் இணைய” குழந்தை வணிகக் குழுவை போலீசார் முறியடித்தனர். ஐந்து குழந்தைகள் மீட்கப்பட்டதாகவும், 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு துறை இயக்குனர் டத்தோ எம். குமார் இன்று அறிவித்தார். ஒருங்கிணைந்த நடவடிக்கை ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 19 வரை, புக்கிட் அமானின் இணைய குற்றங்களுக்கு எதிரான குழந்தைகள் பிரிவு (MACAC), ஜோகூர் காவல்துறை மற்றும்
ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 29 —
நாட்டை உலுக்கிய புலனாய்வில், மூன்று மாநிலங்களில் பரவியிருந்த “டார்க் இணைய” குழந்தை வணிகக் குழுவை போலீசார் முறியடித்தனர். ஐந்து குழந்தைகள் மீட்கப்பட்டதாகவும், 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு துறை இயக்குனர் டத்தோ எம். குமார் இன்று அறிவித்தார்.
ஒருங்கிணைந்த நடவடிக்கை
ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 19 வரை, புக்கிட் அமானின் இணைய குற்றங்களுக்கு எதிரான குழந்தைகள் பிரிவு (MACAC), ஜோகூர் காவல்துறை மற்றும் சர்வதேச அமைப்புகள் இணைந்து “ காவல்துறை நடவடிக்கை “பேடோ” (Op Pedo) என்ற பெயரில் ஒருங்கிணைந்த சோதனைகளை முன்னெடுத்தன.
ஜோகூர், சிலாங்கூர், பினாங்கு ஆகிய மாநிலங்களில் நடந்த சோதனைகளில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
முக்கிய சந்தேக நபர்
ஜோகூர் பாருவைச் சேர்ந்த 29 வயது தொழில்நுட்ப நிபுணர் கைது செய்யப்பட்டார்.அவரது கைப்பேசியில் நூற்றுக்கணக்கான குழந்தை வன்கொடுமை வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதன் அடிப்படையில் மற்ற மாநிலங்களில் சோதனைகள் தொடர்ந்தன.
கைது செய்யப்பட்டவர்கள்
குமார் கூறியதாவது, கைது செய்யப்பட்டவர்களில் 2 மலேசியப் பெண்கள், 4 இந்தோனேசியப் பெண்கள்,2 இந்தோனேசிய ஆண்கள்,1 மியான்மர் ஆண்,1 பிலிப்பைன்ஸ் பெண் அடங்குவர்.அவர்கள் அனைவரும் 25 முதல் 60 வயது வரையிலானவர்கள்.
மீட்கப்பட்ட குழந்தைகள்
முக்கிய சந்தேக நபரின் பிடியில் இருந்த மூன்று சிறுமிகள் மற்றும் இரண்டு மாதங்கள் முதல் ஐந்து வயது வரையிலான இரண்டு சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.
“இந்த குழந்தைகள் பாதிக்கப்பட்டவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அந்த நேரத்தில் கைதான பெண்கள் அவர்களின் பாதுகாவலர்களாகவும் பராமரிப்பாளர்களாகவும் செயல்பட்டனர்,” என குமார் கூறினார்.
குழந்தைகள் தற்போது சமூக நலத்துறையின் (JKM) பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள்
பிறப்புச் சான்றிதழ்கள், அடையாள அட்டைகள், மகப்பேறு பதிவு புத்தகங்கள், வெற்று தேசிய பதிவுத்துறை (NRD) படிவங்கள்,கைப்பேசிகள்,ஹார்டு டிரைவ்கள் போலிஸ் சோதனைகளின் போது பறிமுதல் செய்யப்பட்டவை.
செயல்முறை வெளிச்சம்
“சந்தேக நபர் முதலில் பேஸ்புக் வழியாக உயிரியல் தாய்மார்களைத் தொடர்பு கொண்டு, தத்தெடுப்பு பெயரில் குழந்தையை அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டான். அவர் RM1,500 முதல் RM3,500 வரை பணம் கொடுத்து குழந்தையை வாங்கினான்; பிரசவச் செலவையும் ஏற்றுக்கொண்டான். பிறகு தேசிய பதிவுத்துறையில் ஆவணங்களைச் சட்டபூர்வமாக பெற்றுக் கொண்டான்,” என்று குமார் தெரிவித்தார்.ஆனால், குழந்தைகள் பின்னர் பாலியல் வன்கொடுமை படங்கள் மற்றும் வீடியோக்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
சட்ட நடவடிக்கை
“சந்தேக நபர்கள் மீது குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 பிரிவு 5, பிரிவு 14(a), பிரிவு 14(d) ஆகியவற்றின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது,” என்று குமார் உறுதிப்படுத்தினார்.
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *