பாதுகாப்பு நடைமுறைகளை மறுபரிசீலிக்க உத்தரவு – பிரதமர் அன்வார்

பாதுகாப்பு நடைமுறைகளை மறுபரிசீலிக்க உத்தரவு – பிரதமர் அன்வார்

அரசுப் படை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊழல் விசாரணைக்கு பின் கடுமையான நடவடிக்கை புத்ராஜெயா, ஆகஸ்ட் 23 — மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பாதுகாப்புத் துறை அமைச்சகம் (Mindef) தேசிய பாதுகாப்பு தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் (protocols) மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு, சமீபத்தில் சில மலேசிய ஆயுதப் படை (Armed Forces) அதிகாரிகள் தொடர்பான ஊழல் விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் வெளியிடப்பட்டது. பாதுகாப்பு பாதிப்பு குறித்து கவலை தகவல் தொடர்பு அமைச்சர்

அரசுப் படை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊழல் விசாரணைக்கு பின் கடுமையான நடவடிக்கை

புத்ராஜெயா, ஆகஸ்ட் 23 — மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பாதுகாப்புத் துறை அமைச்சகம் (Mindef) தேசிய பாதுகாப்பு தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் (protocols) மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு, சமீபத்தில் சில மலேசிய ஆயுதப் படை (Armed Forces) அதிகாரிகள் தொடர்பான ஊழல் விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் வெளியிடப்பட்டது.

பாதுகாப்பு பாதிப்பு குறித்து கவலை

தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ பாஹ்மி, இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் இந்தக் கவலையை வெளிப்படுத்தியதாக தெரிவித்தார்.

“தேசிய பாதுகாப்பு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார். மேலும், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) நடத்திய விசாரணை முடிந்ததும், Mindef விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்,” என்று பாஹ்மி குறிப்பிட்டார்.

ஓப்ஸ் சொஹோர்(Ops Sohor) விசாரணை

இந்த மாதம் தொடக்கத்தில் MACC நடத்திய ‘Ops Sohor’ நடவடிக்கையின் கீழ், 5 மூத்த ஆயுதப் படை அதிகாரிகள் உட்பட 10 பேர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் சிக்கியவர்களில் முன்னாள் இராணுவ நுண்ணறிவு அதிகாரிகளாக இருந்த இரு ஆன்லைன் ஊடக நிருபர்கள், ஒரு நிறுவன மேலாளர், மலேசிய மருத்துவ சங்கத்தின் நிர்வாக உதவியாளர், மற்றும் ஒரு வெளிநாட்டு பெண் ஆகியோரும் அடங்குவர்.

சட்டவிரோத வர்த்தக வளையம்

மேலும், கிளாங்க் பள்ளத்தாக்கு மற்றும் ஜொகூர் பகுதிகளில் 14 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதில், சிகார், புகையிலை, மற்றும் மது விநியோக வர்த்தகத்தில் ஈடுபட்ட பல நிறுவனங்கள் மற்றும் வணிகர்களும் MACC வலையில சிக்கினர்.

இந்தக் குற்றச்செயல்களின் காரணமாக 2020 முதல் 2024 வரை RM250 மில்லியனுக்கும் அதிகமான வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். நன்றி The Malay Mail

பரிந்துரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

அண்மை

சிறந்த ஆசிரியர்கள்

அதிக கருத்து

காணொளிகள்

வகையினம்