இணையவழி பகடிவதை-ஒரு மனோவியல் பார்வை

இணையவழி பகடிவதை-ஒரு மனோவியல் பார்வை

பத்தியாளர்,
பேராசிரியர் டத்தோ மருத்துவர்
மு சுவாமிநாதன்,
மனநல மருத்துவர்,
மலாக்கா.

இணையவழி பகடிவதை ( cyber bullying) என்பது இணையத்திலுள்ள செயலிகளின் (டிக் டாக், முகநூல், இன்ஸ்டாகிராம்) மூலம் மற்றவரை கேலி செய்வது, அவமானப் படுத்துவது, அவதூறு பரப்புவது அல்லது மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதைக் குறிக்கும். மலேசியாவில் இது தண்டனைக்கு உரிய குற்றமாகும். பாதிக்கப்பட்டவர் மனதளவில் பலவீனமான நிலையில் இருந்தால் அவர் பல்வேறு மனநல பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்.

  1. மனு உளைச்சல்,
  2. ⁠அதீத பயம் (anxiety)
  3. ⁠அதீதி கவலை (depression)
  4. ⁠அவமானம்
  5. ⁠குற்ற உணர்வு
  6. ⁠தற்கொலை எண்ணம்
  7. ⁠தூக்கமின்மை
  8. ⁠மது பானப் பழக்கம்
  9. ⁠உறவுகளில் விரிசல்
  10. ⁠வேலைத்திறன்/கல்வித்திறன் குறைதல்

போன்றவை இணையவழி பகடிவதைக்கு ஆளானவர்களுக்கு ஏற்படுகிறது. அதே சமயத்தில் இரு தரப்பினரும் சமபலத்துடன் இருந்தால் அவர்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி வசை பாடிக் கொள்வார்கள். இதன் மூலம் தங்கள் சொந்த தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய விபரங்களை உலகம் முழுக்கத் தெரிய வழி வகுத்துக் கொடுக்கிறார்கள். ஒவ்வொருவரின் அந்தரங்க வாழ்க்கையையும் அம்பலத்துக்கு கொண்டு வந்துவிடுகிறார்கள். இது அவர்களை மட்டுமின்றி அவர்களை சார்ந்தவர்களுக்கும் சங்கடத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்துகின்றது.

இணையவழி சித்திரவதை ஒரு மனநோயா?


தற்பொழுது இதை ஒரு மனநோயாக கருத முடியாது. ஆனாலும் இவர்கள் சில வேண்டாத குணாதிசியங்களைக்(personality) கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் வெறுக்கத்தக்க குணாதிசியங்கள் பின் வருமாறு.

  1. கோபத்தை கையாள முடியாதவர்கள்
  2. ⁠பொறாமை குணம் கொண்டவர்கள்
  3. ⁠பழிவாங்கும் எண்ணம் கொண்டவர்கள்
  4. ⁠ஏமாற்றும் குணம் உள்ளவர்கள்
  5. ⁠பிறரை துன்புறுத்தி இன்பம் காண்பவர்கள் (sadism)
  6. ⁠தங்களைப்பற்றி மிக உயர்வாக நினைப்பவர்கள் (narcissistic)
  7. ⁠ஏற்கனவே வேறு பல குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள்
  8. ⁠போதைப் பொருள் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளவர்கள்
  9. ⁠பிறர் உணர்வுகளை புரிந்து கொள்ள அல்லது மதிக்கத் தெரியாதவர்கள். (Lack of empathy)
  10. ⁠தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள். தங்களின் சக்தியை, ஆளுமையை நிரூபிப்பதற்காக இணைய பகடிவதையில் ஈடுபடுவார்கள்.
  11. ⁠ஏற்கனவே பகடிவதைக்கு ஆளானவர்கள்
  12. ⁠தனிமையில் தவிப்பவர்கள். பிறர் கவனத்தைத் தன்பால் ஈர்த்துக் கொள்ள பகடிவதையில் ஈடுபடுவார்கள். தான் பட்ட துன்பங்களை மற்றவர்களுக்கும் கொடுக்கவேண்டும் என்று நினைப்பவர்கள்.
  13. ⁠எளிதில் சலிப்படைபவர்கள். சலிப்பைப் போக்க ஏதாவது புதிதாக முயற்சிக்க எண்ணம் உள்ளவர்கள்
  14. மன முதிர்ச்சி அற்றவர்கள். பிரச்சனைகள ஆக்கப்பூர்வமாக, அறிவுப்பூர்வமாக அணுக இயலாமல் எதிரமறையான வழியில் மன உளைச்சலை எதிர்கொள்பவர்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களுக்காக இணையவழி பகடிவதையை மேற்கொள்கிறார்கள். நேரடியாக பகடிவதை செய்வதைவிட இணையவழி பகடிவதை எளிதாக இருக்கிறது.

  1. தனது அடையாளத்தை மறைத்துக் கொள்ள முடியும்
  2. ⁠எதிர் கருத்துக்கள் வரும் முன் அப்புலனத்தில் இருந்து வெளியேறி விட முடியும்
  3. ⁠பெரிய உருவமோ அல்லது உடல் பலமோ தேவையில்லை
  4. ⁠இணையம் மட்டும் இருந்தால் போதும். பகடிவதை செய்ய வழியும் ஆட்களும் எளிதில் கிடைக்கும்.
  5. ⁠இணையவழி பகடிவதைக்கு ஆளான பலர் அமைதியாக இருந்து விடுகின்றனர். இது பகடி வதை செய்பவர்களுக்கு அனுகூலமாக அமைகிறது.
  6. ⁠குறுகிய நேரத்தில் பலரையும் சென்றடைகிறது. ஒருவரை பலர் மத்தியில் அவமானப்படுத்த அது உதவுகிறது. மிரட்டவும், பணம் பறிக்கவும் ஏதுவாகிறது.

இணையவழி சண்டையிட்டுக் கொள்ளவதும், ஒருவர் மீது ஒருவர் வசை பாடி செய்திகளை அனுப்புவதும், நான் மேலே குறிப்பிட்ட 14 காரணங்களினால் ஒன்றாக இருக்கலாம். இது நம் முகத்தில் நாமே கரியைப் பூசிக்கொள்வதற்கு ஒப்பாகும். Don’t wash dirty linen in public என்று பழமொழி உள்ளது. நம் வீட்டுப் பிரச்சனைகளை பொது இடத்தில் வெளிப்படையாக பேசாதீர்கள். அதனால் அவமானம் உங்களுக்குத்தான், என்பது இதன் பொருள்.

இறுதியாக இணைய வழி பகடிவதை செய்பவர்கள் தங்கள் தவறை உணர்ந்து தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். உணர்ந்து திருந்த நினைப்பவர்கள் நிபுணத்துவ ஆலோசனையையும் நாடலாம். அப்படி இல்லையென்றால் சட்டம் தன்கடமையைச் செய்யும்.

பேராசிரியர் டத்தோ மருத்துவர்
மு சுவாமிநாதன்,
மனநல மருத்துவர்.

(பத்தியாளர், டத்தோ டாக்டர் எம். சுவாமிநாதன் மலேசியாவில் சிறப்புப் பெற்ற மனையியல் நிபுணர் ஆவார். இந்தியாவின் மதராஸ் பல்கலைக்கழகத்தில் MBBS பட்டமும், மலாயா பல்கலைக்கழகத்தில் Master of Psychological Medicine பட்டமும் பெற்றவர்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலான மருத்துவ மற்றும் கற்பித்தல் அனுபவம் கொண்ட இவர், தற்போது Manipal University College Malaysia (Melaka)-இல் மனையியல் துறைத் தலைவர் மற்றும் உபதலைவர் (Deputy Dean) பதவியில் உள்ளார்.
மனநலம் மேம்பாடு, பெற்றோர்-மாணவர் ஆலோசனை மற்றும் சமூக விழிப்புணர்வு ஆகிய துறைகளில் பெரும் பங்காற்றி வருகிறார். மலேசிய National Specialist Register (NSR)-இல் பதிவு செய்யப்பட்ட இவர், பல்வேறு மருத்துவ நிறுவனங்களிலும் கல்வித் துறையிலும் தன்னுடைய நிபுணத்துவத்தால் உயர்ந்த மரியாதையை பெற்றுள்ளார்.)

பரிந்துரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

அண்மை

சிறந்த ஆசிரியர்கள்

அதிக கருத்து

காணொளிகள்

வகையினம்