அசாலீனா- அரசியல்வாதிகள் தொடர்பான குற்ற வழக்குகள்: 41 விசாரணைகளுக்கு கூடுதல் வடவடிக்கை இல்லை ‘NFA’

அசாலீனா- அரசியல்வாதிகள் தொடர்பான குற்ற வழக்குகள்: 41 விசாரணைகளுக்கு கூடுதல் வடவடிக்கை இல்லை ‘NFA’

கோலாலம்பூர், செப்டம்பர் 4 — 2020 முதல் இந்த ஆண்டு ஜூலை வரை அரசியல்வாதிகளைச் சேர்ந்த மொத்தம் 60 குற்ற விசாரணை ஆவணங்களில் 41, கூடுதல் நடவடிக்கை இல்லை (No Further Action – NFA) என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் துறை (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் சையத் தெரிவித்துள்ளார்.

அவர் திவான் நெகாராவில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், “சிவில் வழக்குகளைப் போலல்லாமல், குற்ற வழக்குகளுக்கு காலவரம்புகள் எதுவும் இல்லை. புதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டால், இப்படிப்பட்ட வழக்குகள் மீண்டும் திறக்கப்படலாம்” என்று வலியுறுத்தினார்.

ஃப்ரீ மலேசியா டுடே (FMT) வெளியிட்ட தகவலின்படி, அசாலினா மேலும், அட்டர்னி ஜெனரல் அறை (AGC) எந்த நபரின் பின்னணியையும் கருதாது, போலீஸ் சமர்ப்பித்த அனைத்து விசாரணை ஆவணங்களையும் முழுமையாக மதிப்பாய்வு செய்கிறது என்று குறிப்பிட்டார்.

இதனால், அரசியல்வாதிகளின் குற்ற விசாரணைகளில் சட்ட நடைமுறை தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பரிந்துரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

அண்மை

சிறந்த ஆசிரியர்கள்

அதிக கருத்து

காணொளிகள்

வகையினம்