புத்ராஜெயா, ஆகஸ்ட் 29 — 2025 தேசிய தின கொண்டாட்டத்திற்கான முழு ஆடை ஒத்திகை இன்று நடைபெற்றது. ஒத்திகை மட்டுமே என்றாலும், அனைத்து வயதினரும், பல்வேறு பின்னணியினரும் ஆயிரக்கணக்கில் மக்கள் அதிகாலை முதலே டத்தாரன் புத்ராஜெயாவிற்கு திரண்டனர். காலை 5.30 மணி முதலே கூட்டம் திரளத் தொடங்கிய நிலையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து வந்தும், அணிவகுப்பை நேரில் காண உற்சாகம் காட்டினர். பள்ளி மாணவர்கள், சீருடை வீரர்கள், அரசு மற்றும் தனியார்
புத்ராஜெயா, ஆகஸ்ட் 29 — 2025 தேசிய தின கொண்டாட்டத்திற்கான முழு ஆடை ஒத்திகை இன்று நடைபெற்றது. ஒத்திகை மட்டுமே என்றாலும், அனைத்து வயதினரும், பல்வேறு பின்னணியினரும் ஆயிரக்கணக்கில் மக்கள் அதிகாலை முதலே டத்தாரன் புத்ராஜெயாவிற்கு திரண்டனர்.
காலை 5.30 மணி முதலே கூட்டம் திரளத் தொடங்கிய நிலையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து வந்தும், அணிவகுப்பை நேரில் காண உற்சாகம் காட்டினர். பள்ளி மாணவர்கள், சீருடை வீரர்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் என மொத்தம் 81 குழுக்கள் பங்கேற்றனர்.
52 வயதான அர்தனா மத் நூர் தனது குடும்பத்துடன் நெகிரி செம்பிலானின் ரெம்பாவில் இருந்து அதிகாலை 3 மணிக்கே புறப்பட்டு ஒத்திகையை காண வந்திருந்தார். “கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக நாங்கள் தேசிய தின அணிவகுப்பை ஒருபோதும் தவறவிடவில்லை. இந்த ஆண்டு 31-ஆம் தேதி எனக்கு வேலை காரணமாக முடியாததால் ஒத்திகைக்கே வந்தோம். மலேசியர்கள் எப்போதும் இத்தகைய நிகழ்வுகளில் தங்கள் ஆதரவை வெளிப்படுத்துகிறார்கள் என்பதற்கான சான்றிதான் இக்கூட்டம்,” என அவர் கூறினார்.
காலை 7.30 மணிக்கு தொடங்கிய ஒத்திகை, 10 மணிக்கு நிறைவுற்றது. மேகமூட்டமான வானிலை கூட்டத்திற்கு இலகுவான சூழலை ஏற்படுத்தியது.
தகவல் தொடர்பு அமைச்சக பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ முகமது ஃபௌஸி முகமது இசா கூறுகையில், “ஒத்திகை சிறப்பாக நடைபெற்றது. அணிவகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தன. சுமார் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் நிகழ்ச்சி நீடித்தது. தேசிய தினத்தன்று கூட நல்ல வானிலை நிலவுமென நம்புகிறோம்,” என்றார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒத்திகையில் கலந்து கொண்டார். குறிப்பாக, 2,000 மாணவர்கள் இணைந்து உருவாக்கிய மனித கிராஃபிக் நிகழ்ச்சிக்கு பிரதமர் உற்சாகம் வெளிப்படுத்தினார்.
இந்த ஆண்டு தேசிய தின கொண்டாட்டத்தில் சுமார் 100,000 பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என்று ஃபௌஸி தெரிவித்தார். “மேலும், நாளை மாலை தொடங்கும் ‘ரியு மெர்டேகா’ உள்ளிட்ட பல முன்னணி நிகழ்ச்சிகளும் நடைபெறும்,” என்றார். — பெர்னாமா
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *