கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 — மின் சிகரெட் (E-Cigarette) மற்றும் வேப்ஸ் தொடர்பான முழு தடையைப் பற்றிய அறிக்கை, சுகாதார அமைச்சக நிபுணர்கள் குழுவால் தயாராகி வருகிறது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சூல்கிஃப்லி அஹ்மத் கூறினார். அவர் மேலும் கூறுகையில், “வேப்ஸ் திரவங்களில் சட்டவிரோத மருந்துகள் கலக்கப்பட்டுள்ள விவகாரங்களையும் இந்த அறிக்கை கவனிக்கிறது. அறிக்கை தயார் ஆனதும், அது அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும். ஆனால் அதற்கான நேரம் அறிவிக்கப்படவில்லை. இது தடை செய்வோமா என்ற கேள்வி இல்லை;
கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 — மின் சிகரெட் (E-Cigarette) மற்றும் வேப்ஸ் தொடர்பான முழு தடையைப் பற்றிய அறிக்கை, சுகாதார அமைச்சக நிபுணர்கள் குழுவால் தயாராகி வருகிறது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சூல்கிஃப்லி அஹ்மத் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “வேப்ஸ் திரவங்களில் சட்டவிரோத மருந்துகள் கலக்கப்பட்டுள்ள விவகாரங்களையும் இந்த அறிக்கை கவனிக்கிறது. அறிக்கை தயார் ஆனதும், அது அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும். ஆனால் அதற்கான நேரம் அறிவிக்கப்படவில்லை. இது தடை செய்வோமா என்ற கேள்வி இல்லை; எப்போது தடை செய்வோம் என்பதே முக்கியம். அதற்கான வழிகாட்டுதலாக அறிக்கை இருக்கும்,” என்று அவர் மக்களவையில் பேசினார்.
தற்போது மலேசிய அரசு, 2024-ஆம் ஆண்டில் அமலுக்கு வந்த புகைபிடிக்கும் பொருட்கள் கட்டுப்பாடு சட்டம் 852 அடிப்படையில் செயல்படுகிறது. எனவே உடனடி முழு தடை விதித்தால் தொழில் துறையினர் நீதிமன்றத்தில் சவால் விடுக்கக்கூடும் என்பதால் அரசு கவனமாக நடந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
பண்டார் கூச்சிங் எம்.பி., டாக்டர் கெல்வின் யி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், மின்-சிகரெட் மற்றும் வேப்ஸ் காரணமாக ஏற்படும் நுரையீரல் சேதம் (EVALI) உள்ளிட்ட சுகாதார அபாயங்களை அமைச்சகம் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
அதே நேரத்தில், சிங்கப்பூரில் போதைப்பொருள் கலந்த வேப்ஸ் அதிகரித்துள்ளதால், மலேசிய அரசின் நிலைப்பாடு தடையை நோக்கியே இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், இந்த பிரச்சினை பிராந்திய மட்டத்திற்கும் எடுத்துச் செல்லப்படும். அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசியான் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் (AHMM) வேப் கட்டுப்பாடு விவாதிக்கப்பட வேண்டும் என்று மலேசியா முன்மொழிந்துள்ளது என்று சூல்கிப்லீ தெரிவித்தார். — செய்தி/படம் பெர்னாமா
 
																				



















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *