உலக அரசியலை நையாண்டி செய்யும் காட்சி
.பாங்காக், செப்டம்பர் 25 – வணிக மையம் ஒன்றில் கலை நிறுவல் என்ற பெயரில் உலக அரசியலின் நான்கு சின்னங்கள் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் — மவுண்ட் ரஷ்மோர் பாணியில் பாங்காக்கில் ஒரே வரிசையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வணிகமா? அல்லது அரசியல் கேலி?
“Somewhere Else The Series – The Summit Camp” என்ற முகாம் நிகழ்ச்சிக்கான ப்ரொமோஷன் என்று சொல்லப்பட்டாலும், இதில் தெரிகிறது வணிகம் மட்டும் அல்ல; உலக அரசியலை நையாண்டி செய்யும் காட்சி. மக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்கிறார்கள், ஆனால் அந்தக் கல்லின் முகங்கள் உலகின் மிகுந்த கலவரங்களையும் போர்களையும் நினைவூட்டுகின்றன
டிரம்பின் முகம் — எங்கே நிற்கிறார் அவர்?
டிரம்பை புடின், ஜி, கிம் உடன் இணைத்துக் காட்டுவது சாதாரண விஷயமல்ல. உலகளவில் ஜனநாயகத்தின் முகமாய் இருக்க வேண்டிய அமெரிக்கா, இன்று “வலுவான கையால்” ஆட்சி செய்யும் தலைவர்களுடன் ஒரே வரிசையில் காட்சியளிக்கிறது. விமர்சகர்கள் இதனை அரசியல் நையாண்டியாகப் பார்க்க, டிரம்ப் ஆதரவாளர்கள் இதையே பெருமை எனக் கொண்டாடுகிறார்கள் — “நம்ம தலைவர் உலக வல்லரசுகளுடன் சமமாக நிற்கிறார்” என்று.
தாய்லாந்தின் நுணுக்கமான அரசியல்
சில வாரங்களுக்கு முன் பாங்காக்கில் சீனாவை விமர்சித்த கலைப்பணிகள் தூதரக அழுத்தத்தில் அகற்றப்பட்டன. அதே தாய்லாந்தில் இன்று ஜி ஜின்பிங்கின் கல் முகம் நகைச்சுவைச் சின்னமாக நிற்கிறது. சீனாவுடன் நெருங்கிய உறவை வைத்திருக்கும் நாடு, இவ்வளவு தைரியமாக ஒரு கேலிச்சின்னத்தை வணிக நிகழ்ச்சியில் காட்டுவது அரசியல் விரோதமா, அல்லது வணிகக் கிளுகிளுப்பா?
மக்கள் பார்வை
சமூக ஊடகங்களில் இது மீம்ஸ்களாகப் பரவுகிறது. சிலருக்கு இது சாகசமான கலை; சிலருக்கு இது அபாயமான கேலி. ஆனால் உண்மை என்னவென்றால் நான்கு கல் முகங்கள், தாய்லாந்தின் மாலில் மட்டும் அல்ல, உலகின் அதிகார அரசியலை வெளிப்படுத்தும் ஒரு சத்தமில்லா கேள்வியாக மாறியிருக்கிறது.
சீகான் ஸ்கொயர் மாலின் இந்த “மவுண்ட் ரஷ்மோர்” நிறுவல், வெறும் வாடிக்கையாளர் ஈர்ப்பு முயற்சி அல்ல. இது உலக அரசியல் மேடையில் ஜனநாயகமும் அதிகாரமும் எவ்வாறு கல்லில் பொறிக்கப்படுகின்றன என்பதற்கான கடுமையான காட்சிப்படம்.

“தெற்கு டகோட்டாவில் உள்ள மவுண்ட் ரஷ்மோர், அமெரிக்காவின் மிகச் சிறந்த அடையாளச் சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஜடாயு குரல்-
“நான்கு முகங்கள் கல்லில் நிற்கின்றன… ஆனால் ஜனநாயகத்தின் முகம் எங்கே மறைந்திருக்கிறது?”















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *