ஒரே நேரத் தேர்தல் – செலவுக் குறைப்பா? மாநில சுயாட்சிக்கான சவாலா?

ஜடாயு குரல்

கோலாலம்பூர், செப். 21, 2025
ஜனநாயக செயல் கட்சி (DAP) பொதுகச் செயலாளர் ஆன்டோனி லோக், நேற்று நடைபெற்ற நெகிரி செம்பிலான் DAP-யின் 23வது மாநாட்டில் அரசியல் அமைப்பில் பெரும் மாற்றத்தைத் தூண்டும் பரிந்துரையை முன்வைத்தார்.
அது – GE16 (நாடாளுமன்றத் தேர்தல்) மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்பதுதான்.

ஆண்டனி லோக்-இன் வாதம் தெளிவாக இருந்தது:

“தேர்தல் செலவுகள் குறையும். அரசியல் அலைச்சல்கள் குறையும். நாடு முழுவதும் ஒருங்கிணைந்த நிர்வாக நிலைமை உருவாகும்.”

இது அரசியல் வசதியைத் தரும் என்றாலும், கேள்வி ஒன்று எழுகிறது:
“இந்த மாற்றம் மாநில அரசுகளின் சுயாட்சியை பலிகொடுக்கிறதா?”

கூட்டாட்சியின் கால அட்டவணை vs மாநிலத்தின் உரிமை

மலேசிய அரசமைப்பின் அடிப்படை – federalism, அதாவது கூட்டாட்சியின் கீழ் மாநிலங்களின் சுயாட்சி.
இன்றைய சூழலில், மாநில முதல்வர் (Menteri Besar/Chief Minister) தனது சட்டமன்றத்தை கலைக்க விரும்பினால், அது சுல்தான் அல்லது ஆளுநரின் ஒப்புதலோடு சாத்தியம்.அதுவே மாநில அரசின் சுயாட்சி.

ஆனால், ஒரே நேரத் தேர்தல் என்ற கட்டாயம் வந்துவிட்டால், மாநில அரசின் தீர்மான அதிகாரம் மையத்தின் (federal) கால அட்டவணைக்குள் அடக்கப்படும்.
அதாவது, கூட்டாட்சி தீர்மானித்தால் தான் மாநிலங்களும் தேர்தலுக்குச் செல்ல வேண்டும்.இதுவே சுயாட்சியின் அடிப்படையையே சிதைக்கக்கூடிய சாத்தியமாகலாம்.

நிபுணர்கள் சொல்வது என்ன?

Francis Hutchinson (ISEAS – Yusof Ishak Institute) தனது 2024 மே மாத ஆய்வில் கூறியுள்ளார்:
ஒரே நேரத் தேர்தல் செலவுக் குறைவு மற்றும் பிரசார சுமை குறைவு போன்ற நன்மைகளைத் தரலாம். ஆனால், அதே நேரத்தில் மாநில அரசுகள் தங்கள் நேரத்தைத் தீர்மானிக்க முடியாத நிலைக்கு தள்ளப்படும் அபாயமும் உண்டு.

நிலைத்தன்மையா? சுயாட்சியா? எது அதீத முக்கியம்? என்று எழும் கேள்விக்குச் சிறந்த பதில்?

ஜடாயு குரல்

மக்களின் பணத்தைச் சேமிக்கும் பெயரில், மாநிலங்களின் உரிமையை கூட்டாட்சிக்கு ஒப்படைக்க வேண்டுமா?
அரசியல் சோர்வைத் தவிர்ப்பதற்காக, அரசமைப்பின் சமநிலையை உடைக்க வேண்டுமா?ஒரே நேரத் தேர்தல் வசதி தரும், ஆனால் மலேசிய கூட்டாட்சி ஜனநாயகத்தின் அழகு – மாநிலங்களின் சுயாதீனம்.அந்த சுயாட்சியை பலிகொடுக்க வேண்டிய நிலை உருவாகினால், அது அரசியல் வெற்றியல்ல, மைய அரசின் வெற்றி மட்டுமே.

பரிந்துரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

அண்மை

சிறந்த ஆசிரியர்கள்

அதிக கருத்து

காணொளிகள்

வகையினம்