சபாவில் வெள்ளப் பேரழிவு – 9 பேர் பலிஉடனடி உதவியாக RM21 மில்லியன் அறிவிப்பு: பிரதமர் அன்வார்

சபாவில் வெள்ளப் பேரழிவு – 9 பேர் பலிஉடனடி உதவியாக RM21 மில்லியன் அறிவிப்பு: பிரதமர் அன்வார்

கோத்தா கினபாலு, செப்.16 –
சபாவில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் மண்சரிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பேரழிவில் இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பிரதமர் தத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உடனடி நிவாரண உதவியாக RM21 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

இதில், RM10 மில்லியன் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (NADMA) வழியாக உடனடி உதவிக்காக வழங்கப்பட்டுள்ளது. அதற்கு கூடுதலாக, RM11 மில்லியன் மாநில அரசுக்கு அவசர வசதிகள் சீரமைப்புக்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சபா பேரிடர் மேலாண்மை குழுவின் தகவல்படி, உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு RM10,000 துயர் பகிர்வு உதவி, மற்றும் தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் RM1,000 வழங்கப்படும்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பெனம்பாங், பபார், பியூஃபோர்ட், மம்பாகுட் மற்றும் தவாவ் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 800-க்கும் மேற்பட்டோர் (சுமார் 220 குடும்பங்கள்) பாதுகாப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பெரும் உயிரிழப்பு ஏற்பட்ட மண்சரிவுகள் கோத்தா கினபாலுவின் காம்பூங் சென்டெரகாசிஹ் மற்றும் பபாரின் காம்பூங் மூக் ஆகிய இடங்களில் நிகழ்ந்தன.

“இந்த பேரிடரை சமாளிக்க கூட்டாட்சி அரசு முழு திறனுடனும் சபா அரசுக்கு துணை நிற்கும்,” என அன்வார் பிரதமர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

பரிந்துரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

அண்மை

சிறந்த ஆசிரியர்கள்

அதிக கருத்து

காணொளிகள்

வகையினம்