“சரியான நேரத்தில் அறிவிப்பை வெளியிடுவோம்”- முகிதீன்

“சரியான நேரத்தில் அறிவிப்பை வெளியிடுவோம்”- முகிதீன்

ஷா ஆலம், செப்டம்பர் 7 —
பிரிபூமி பெர்சத்து மலேசியாகட்கித் தலைவர், டான் ஸ்ரீ முகிதீன் யாசின், வரவிருக்கும் சபா மாநிலத் தேர்தலை தவிர்க்க முடியாத ஒன்றாகக் குறிப்பிட்டார். அதற்கான முன்னேற்பாடுகள் கட்கியின் முக்கிய கவனக் குறிப்பாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

2025- பெர்சத்து ஆண்டுப் பொதுக் கூட்டத்திற்குப் பிறகு பேசுகையில், சபாவில் பொதுமக்களின் ஆதரவு உயர்ந்து வருவதாகவும், மக்கள் தற்போதைய தலைமை அமைச்சரான டத்தோஸ்ரீ ஹாஜிஜி நூரின் (காபோங்கன் ரக்யாட் சபா – GRS) அரசாங்கத்தை நிராகரிக்க விரும்புவதாகவும் விளக்கினார்.

“நான் தனிப்பட்ட முறையில் ஹம்சா ஜைனுதீன் மற்றும் பிற சகாக்களுடன் சபா சமூகங்களைச் சந்தித்தேன். மக்கள் மாற்றத்தை நாடுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. மாநிலத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு உருவாகும் என்பதில் நாங்கள் நம்பிக்கையாக இருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

முகிதீன், கட்சியின் வலிமைக்கு அடித்தளமாக ஒற்றுமையை வலியுறுத்தினார். மேலும், அரசியல் கூட்டணிகள் குறித்த விவாதங்கள் தேர்தல் நெருங்கும் காலக்கட்டத்தில் நடத்தப்படும் என்றாலும், GRS உடன் இணைந்து செயல்படமாட்டோம் எனத் தெளிவுபடுத்தினார்.

“ஹாஜிஜியை முதலமைச்சராக நியமித்தவர்கள் நாங்கள்தான், ஆனால் அவர் எங்களை புறக்கணித்தார். துரோகிகளுடன் சேர்ந்து வேலை செய்ய எந்த காரணமும் இல்லை,” என்றார்.

பெர்சத்து துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ரொனால்ட் கியாண்டியை முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழிவது குறித்த கேள்விக்கு, நேரம் வரும்போது முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

“அவசரப்பட வேண்டிய அவசியமில்லை. சரியான நேரத்தில் அறிவிப்பை வெளியிடுவோம்,” என்று முகிதீன் மேலும் குறிப்பிட்டார்.

பரிந்துரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

அண்மை

சிறந்த ஆசிரியர்கள்

அதிக கருத்து

காணொளிகள்

வகையினம்