மைக்கல் பீமன் மெர்டேக்கா இன்னிசை இரவில் நாட்டுப்பற்று கொண்டாட்டம்.

மைக்கல் பீமன் மெர்டேக்கா இன்னிசை இரவில் நாட்டுப்பற்று கொண்டாட்டம்.

கலை நிகழ்ச்சிகளைத் தயாரித்து ரசிகர்களுக்கு இசை விருந்தை படைத்துவரும் டாக்டர் மைகல் பீமனின் மெர்டேக்கா இன்னிசை இரவில், மெர்டேக்கா என்ற முழக்கத்துடன் நாட்டுப்பற்று கொண்டாட்டத்தை கலைஞர்களும் ரசிகர்களும் ஒருசேரக் கொண்டாடினர்.

“அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் என்ற கலைஞர்கள் பாடிய பாட்டுக்கு, கலைஞர்களும் ரசிகர்களும் மலேசியக் கொடியைக் கையில் தாங்கிப் பிடித்துக் கொண்டு அசைத்து மகிழ்ந்தனர்.

நேற்று, சிரம்பான் டெம்ப்லர் சாலையில் உள்ள பெய் ஹுவா சீனப்பள்ளி மண்டபத்தில், நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் மைக்கல் பீமன், மெர்டேக்கா இன்னிசை இரவு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். பல கலைஞர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், பாடகர்கள் பலகுரல் மன்னன் ஸ்ரீ ஷண்முகனாதன், TMS புகழ் சிவகுரு, ஜி.ஹரிதாஸ், எல்வின், PB ஸ்ரீனிவாஸ் புகழ் கந்தசாமி, காப்பார் மதி மற்றும் பாடகிகள் புவனேஸ்வரி, எழிசா,ரேய்ஷிகா,ஹேமா ஆகியோர் கலந்து கொண்டனர்.

( இடமிருந்து வலம்) ஜடாயூநியூஸ்.காம் ஆசிரியர் இரா.சரவணதீர்த்தா,சபா பல்கலைக் கழக ஆய்வாளர் டாக்டர் ஜெயசீலன், தொழில் முனைவர் பிரகாஷ் ராவ், மலாக்கா கலை பண்பாடு இயக்கதின் தலைவர் திருநாவுக்கரசு ஜே.பி.

மலேசிய தமிழ் மணிமன்றம்,மந்தின் கிளை, ஸ்ரீ முகவரிகள் ஆதரவுடன் இந்நிகச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுஇளம் தொழில் அதிபரும், கொடை நெஞ்சருமான டத்தோ சேகர் இராமன் நிகழ்சியை தலைமை ஏற்றார்.டத்தோ டாக்டர் கோபால கிருஷ்ணன், முன்னாள் ஜாசா அதிகாரி எம்.ஏ. மோகனடாஸ், திருநாவுக்கரசு ஜே.பி ,டத்தோ முருகையா, சபா பலகலைக் கழகத்தின் ஆராய்சியாலர் டாக்டர் ஜெயசீலன் ஆகியோர் சிறப்பு வருகையாளராகக் கலந்து கொண்டனர்.சிறப்பு வருகையாளர்களுக்கும், முக்கியப் பிரமுகர்களுக்கும் மாலை அணிவித்து சிறப்பு செய்தனர் ஜடாயூநியூஸ் ஆசிரியர் இரா.சரவணதீர்த்தா மற்றும் மிண்டாவங்சா தொழில் முனைவர் பிரகாஷ்ராவ் அப்பராவ்.

( இடதிலிருந்து வலம்) மைக்கல் பீமன், மதிப்புமிகு டத்தோ சேஏகர் ராமன், டத்தோ டாக்டர் கோபால கிருஷ்ணன், இரா.சரவனதீர்த்தா

“மலேசியா அருமையான நாடு. உழைப்பில் நம்பிக்கை வைத்தால் மலேசிய மண் நம்மைக் கைவிடாது. ஆகவே நாட்டைக் குறைச்சொல்லுவதால் பயன் ஏதும் இல்லை. முந்தையத் தலைவர்கள் நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கித் தந்து நாட்டை நம்மிடம் ஒப்படைத்து விட்டனர். நம்முடைய கடமை நம் நாட்டுக்குச் சிறந்த குடிமகனாகத் திகழவேண்டும்” என்று தமது தலமையுரையில் டத்தோ சேகர் வலியுறுத்தினார்.

டத்தோ டாக்டர் கோபால கிருஷ்ணன் உரையாற்றுகையில், நாடென்ன செய்தது நமக்கு? என கேள்விகள் கேற்பது எதற்கு? நீயென்ன செய்தாய் அதற்கு ? என்று எம்.ஜிஆர் பாடலை கோடிகாட்டி நாட்டுப் பற்றும் விசுவாசமும் நம் உயிரில் கலந்த உறவாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். கல்வியும் செல்வமும் நம் வளர்ச்சியை உச்சத்திற்குக் கொண்டு செல்லும் என்று கூறி உரையை நிரைவு செய்தார்.

50 முதல் 80 வரையிலான பாடல்களைப் பாடி கூடியிருந்த ரசிகர்களின் உள்ளத்தில் இனிய நினைவுகளைப் புதுப்பித்துச் சென்றனர் கலைஞர்கள். நிகழ்ச்சி நெறியாளராக பொறுப்பேற்றிருந்த தயாரிப்பாளர் மைக்கல் பீமன், இறுதி வரையிலும் நிகழ்ச்சியை ரசிக்கும்படி கொண்டு சென்றார். மனம் மகிழ்ச்சியாக நிலைத்திருக்க இசை ஒரு வழி. இன்று மக்கள் மகிழ்ச்சியுடன் வீடு சென்று, சில மணிநேரங்களில் மலரவிருக்கும் சுதிந்திர தினட்தை கொண்டாட மனம் தயார் நிலையில் பூத்திருக்கும் என்று மைக்கல் பீமன் கூறினார். இதுவே நிகழ்ச்சியின் உள்ளார்ந்த நோக்கம் என்றார் பீமன்.

பரிந்துரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

அண்மை

சிறந்த ஆசிரியர்கள்

அதிக கருத்து

காணொளிகள்

வகையினம்