கடந்த 2017ஆம் ஆண்டு செம்புரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்காக, அப்பள்ளியின் வாரியத்தின் மூலம் மனு செய்யபட்ட சீனாய் சிட்டி (சீனாய் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள) நிலத்தை கை நழுவ விட்டுவிடக்கூடாது என கூலாய் தொகுதி பெரிகாத்தான் நேசனல் கட்சியின் மலாய்கார அல்லாதவர் பிரிவின் தலைவர் (சாயாப்) திரு சந்திரசேகரன் ஆறுமுகம் அறைகூவல் விடுத்துள்ளார். செம்புரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்காக முதலில் அடையாளம் காணப்பட்ட அந்த இடம், ஏதோ ஒரு காரணத்தால் கெம்பாஸ் இம்பியான் இம்மாசுக்கு மாற்றப்பட்டுவிட்டாது என்பதை அனைவரும் அறிந்ததே.
கடந்த 2017ஆம் ஆண்டு செம்புரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்காக, அப்பள்ளியின் வாரியத்தின் மூலம் மனு செய்யபட்ட சீனாய் சிட்டி (சீனாய் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள) நிலத்தை கை நழுவ விட்டுவிடக்கூடாது என கூலாய் தொகுதி பெரிகாத்தான் நேசனல் கட்சியின் மலாய்கார அல்லாதவர் பிரிவின் தலைவர் (சாயாப்) திரு சந்திரசேகரன் ஆறுமுகம் அறைகூவல் விடுத்துள்ளார்.
செம்புரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்காக முதலில் அடையாளம் காணப்பட்ட அந்த இடம், ஏதோ ஒரு காரணத்தால் கெம்பாஸ் இம்பியான் இம்மாசுக்கு மாற்றப்பட்டுவிட்டாது என்பதை அனைவரும் அறிந்ததே.
இந்த சுழ்நிலையில் ஏற்கனவே சீனாய் சிட்டியில் மனு போடப்பட்டிருந்த அந்த நிலத்தை சிம்பாங் ரெங்கம் தமிழ்ப்பள்ளிக்கு வழங்க மாநில முதல்வர் டத்தோ ஓன் ஆபிஸ் உதவவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும்,டத்தோ ஓன் ஆபிஸ் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் மச்சாப் சட்டமன்ற தொகுதியில் அந்த சிம்பாங் ரெங்கம் தமிழ்ப்பள்ளி அமைய பெற்றுயு ள்ளதால்,அந்த பள்ளியை இடம் மற்றம் செய்ய பெரிய சிக்கல் இருக்காது என தம் கருதுவதாக அவர் தெரிவித்தார்.
டத்தோ ஓன் ஆபிஸ்
தனது சொந்த தொகுதியில் உள்ள ஒரு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் குறைவில் இருந்து முடப்படாமல் கப்பற்ற உதவவேண்டும் என்பது இந்திய சமுதாயத்தின் எதிர்பார்ப்பு ஆகும் என்பதையும் கருத்தில் கொண்டு, அந்த பள்ளிக்கு சீனாய் சிட்டிக்கு மற்றபட வேண்டும் என திரு சந்திரசேகரன் ஆறுமுகம் வலியுறுத்தினார்.
கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற புலாய் தொகுதிக்கான நாடாளுமன்ற இடைத்தேர்தலின் போது இந்திய சமுதாயத்தின் கோரிக்கைகளுக்கும் உரிமைளுக்கும் தனது தலைமையிலான அரசங்கம் முக்கியதும் வழங்கும் என வலியுறுத்தியதையும், அந்த அறிவிப்பு வெறும் வார்த்தையாகி விடக்கூடாது என்றும் ஜொகூர் மாநில பெரிகாத்தான் நேசனல் கட்சியின் மாலய்கார் அல்லாதவர் பிரிவின் உச்சமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டு வரும் திரு சந்திரசேகரன் நினைவூட்டினார்.
படங்கள்/கோப்புகள் : பள்ளி தொடர்பான அதிகாரப்பூர்வத் தகவல்கள்



















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *