பாராளுமன்றத்தில் எனது பேச்சை எதிர்க்கட்சியினர் தவறாக விளக்க வேண்டாம் — யூநேஷ் எச்சரிக்கை.

பாராளுமன்றத்தில் எனது பேச்சை எதிர்க்கட்சியினர் தவறாக விளக்க வேண்டாம் — யூநேஷ் எச்சரிக்கை.

சிகாமட் -ஜொகூர், ஆகஸ்ட் 23 குறை கூறும் எதிர் தரப்பினர், அவர்கள் கூறும் குறைகளுக்குச் சம்பந்தப்பட்ட பள்ளிகளை வந்து பார்த்தார்களா? அல்லது அத்தொகுதியில் சம்பந்தப்பட்ட என்னை அழைத்துப் பேசினார்களா? எதுவும் செய்யாமல், எதுவும் தெரியாமல் கண்களைக் கட்டிக் கொண்டு அறிக்கை விட வேண்டாம் என்று சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினர் R.யுனேஸ் ஜடாயு நிருபரிடம் தெரிவித்தார். தம் தொகுதியில் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் தாம் மிகத் தெளிவாக இருப்பதாகவும், தம்முடைய நடவடிக்கை தமிழுக்கும்

சிகாமட் -ஜொகூர், ஆகஸ்ட் 23

குறை கூறும் எதிர் தரப்பினர், அவர்கள் கூறும் குறைகளுக்குச் சம்பந்தப்பட்ட பள்ளிகளை வந்து பார்த்தார்களா? அல்லது அத்தொகுதியில் சம்பந்தப்பட்ட என்னை அழைத்துப் பேசினார்களா? எதுவும் செய்யாமல், எதுவும் தெரியாமல் கண்களைக் கட்டிக் கொண்டு அறிக்கை விட வேண்டாம் என்று சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினர் R.யுனேஸ் ஜடாயு நிருபரிடம் தெரிவித்தார்.

தம் தொகுதியில் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் தாம் மிகத் தெளிவாக இருப்பதாகவும், தம்முடைய நடவடிக்கை தமிழுக்கும் தமிழ்ப் பள்ளிகளுக்கும் நன்மைகளைக் கொண்டு சேர்க்கும் நோக்கத்தை மட்டுமே முன்னிலை படுத்தும் என்று யுக்னேஸ் வலியுறுத்திக் கூறினார்.

“என் தொகுதியில் உள்ள ஆறு தமிழ்ப் பள்ளிகளில் மூன்று பள்ளிகள் ‘மாணவர்கள் குறைந்த பள்ளி’ (SKM) பிரிவில் வருகிறது. மாணவர்கள் குறைவாக உள்ளதோடு, அடிப்படை வசதிகள் குறைபாடாக உள்ளன. மேலும் அந்த நிலம் IOI மற்றும் Sime Darby தோட்டங்களுக்கு சொந்தமானது.

ஒரு தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக, என் தொகுதியின் பிரச்சனைகள் வெளிநாட்டவர்கள் காட்டிலும் எனக்கு நன்றாக தெரியும். எனவே, எதிர்க்கட்சியினர் என் உரையை தவறாகப் புரிந்து கொண்டு, உள் நோக்கம் கொண்ட விமர்சனங்களால் மக்களை வழித் தவறச் செய்ய வேண்டாம்.” என்று யுக்னேஸ் கேட்டுக் கொண்டார்.

அவர் மேலும் கூறியதாவது:

“மலேசியா தமிழ்ப் பள்ளிகள் மேலாண்மை சங்கங்களின் பேரவையிலிருந்து (Pergabungan Persatuan-Persatuan Pengelola Sekolah Tamil Malaysia) தொடர்புடைய கடிதத்தையும் நான் பெற்றுள்ளேன்.” என்று யுக்னேஸ் தெரிவித்தார்.ஜடாயு னியூஸ் இணையத்தள செய்தியில்,, பாராளுமன்றத்தில் தமில்ழ்ப் பள்ளிகள் இடம் மாற்றம் குறித்து நான் பேசிய உரையை உண்மைக்குப் புறம்பாக விமர்சனம் செய்துள்ளது வருத்தம் அளிப்பதாக யுக்னேஸ் கூறினார்.

இங்குள்ள 6 தமிழ்ப்பள்ளிக் கூடங்களூம் தனியார் நிலங்களில் உள்ளன. சென்ற வருடம் சுங்கை மூவார் தோட்டத் தமிழ்ப் பள்ளி, அரசாங்க முழு உதவிப் பள்ளியாக மாற்றப்பட்டது. அதற்கு முன் இப்பள்ளி அரசாங்க பகுதி உதவி பெறும் பள்ளியாக இருந்து வந்தது. அரசாங்க பகுதி உதவிப் பள்ளிகளுக்கான கட்டிடச் செலவுகளை அரசாங்கம் ஏற்காது. அதனைப் பள்ளி வாரியமே கவணித்துக் கொள்ளும். ஏறக்குரைய 100 ஆண்டுகள் கால வரலாறு கொண்ட இப்பள்ளியின் கட்டுமானப் பணிக்கான நிதியுதவித் தேவைகளை நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது பட்ஜெட்டிற்காகப் பரிந்துரை செய்துள்ளேன்.

சுங்கை மூவார் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் தூரத்திலிருந்து வருகின்றனர். மாணவர்கள் குறைவாக இருக்கும் பள்ளிகளில் பிரச்சினைகள் இருப்பது தெரிந்ததே. தளவாடங்கள், ஆசிரியர்கள் போன்ற பிரச்சினைகள் இருக்கலாம். பிரச்சினைகள் இருக்கும்போது அதைக்களையாமல் கட்டுமானப் பணிகள் தாமதமாகலாம். வட்டார கல்வி அலுவலகமும் மாணவர்கள் எண்ணிக்கை ப் பிரச்சினையை அறியும் என்று யுக்னேஸ் பள்ளியின் தற்கால நிலைமையையும் எடுத்துவரும் நடவடிக்கையையும் குறித்து விளக்கினார்.

பரிந்துரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

அண்மை

சிறந்த ஆசிரியர்கள்

அதிக கருத்து

காணொளிகள்

வகையினம்