மற்ற பள்ளிகளில் கிடைக்காத ஒன்று தமிழ்ப் பள்ளிகளில் கிடைக்கிறது. அது என்ன்? தமிழர் பண்பாடு. தமிழ்ப் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்குத்தான் பாரதியார், திருவள்ளுவர்,அவ்வையார், ஞானசம்பந்தர், அப்பர் போன்ற நம் பண்பாடு போற்றுபவர்களைத் தெரிந்து கொள்ள முடியும். காரணம் தமிழ்ப் பள்ளி பாடத்திட்டட்தில் மட்டுமே நம் பண்பாடு குறித்து எழுதப்பட்டிருக்கும் என்று ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளராகவும், பல ஆண்டுகள் மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவராகவும் இருந்து தற்போது ஓய்வுபெற்றுள்ள,சிறந்த ஆன்மீகப் பேச்சாளர்,முனைவர்,
மற்ற பள்ளிகளில் கிடைக்காத ஒன்று தமிழ்ப் பள்ளிகளில் கிடைக்கிறது. அது என்ன்? தமிழர் பண்பாடு. தமிழ்ப் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்குத்தான் பாரதியார், திருவள்ளுவர்,அவ்வையார், ஞானசம்பந்தர், அப்பர் போன்ற நம் பண்பாடு போற்றுபவர்களைத் தெரிந்து கொள்ள முடியும். காரணம் தமிழ்ப் பள்ளி பாடத்திட்டட்தில் மட்டுமே நம் பண்பாடு குறித்து எழுதப்பட்டிருக்கும் என்று ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளராகவும், பல ஆண்டுகள் மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவராகவும் இருந்து தற்போது ஓய்வுபெற்றுள்ள,சிறந்த ஆன்மீகப் பேச்சாளர்,முனைவர், ஆறு நாகப்பன் உரையாற்றிய பகுதி விண்விழி காணொளிச் செய்தியில் இடம்பெற்றுள்ளது.
இவர் எங்கே? எப்போது? இந்த உரையை ஆற்றினார் என்ற தகவல் கிடைக்காதப் போதிலும், இவர் தமிழுக்காக, தமிழர் பண்பாட்டுக்காக ஆற்றிய தரமான உரையின் உள்ளடக்கத்தை ஜடாயு வாசகர்களுக்காக இங்கே பதிவிடுகிறோம்.
பிறப் பள்ளிகளில் மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடம் நடைப்பெற்றாலும், அது மூன்றாம் வகுப்பில் கற்றுத் தரும் “ஆனா ஆவன்னாவோடு” நின்றுவிடும் என்றும் அந்த மாணவன் மூன்றாம் படிவத்திலும் அதே “ஆனா ஆவன்னாவோடு”தான் தமிழைத் தெரிந்து கொண்டிருப்பான் என்றும் நாகப்பன் சுட்டிக்காட்டினார். தமிழ்ப்பள்ளியைத் தவிற பிறப்பள்ளியில் தமிழ்ப் படித்துத் தேறியதாக வரலாறு இல்லை என்று அவர் வலியுறுத்தினார். “நம் குழைந்தைகளைத் தமிழ்ப் பள்ளிக்கு அனுப்புங்கள்” இதுவே உறுதியான ஒன்று என்று அவர் முடிவாகக் கூறினார். மேலும் அவர் கூறுகையில், பாடத்திட்டம் பொதுவென்றாலும் தமிழ்ப் பள்ளி கற்றுத்தரும் நமது பண்பாடு மாற்றுப் பள்ளிகளில் கிடைக்காது என்று நாகப்பன் தமிழ்ப் பள்ளியை ஆதரிக்கும் ஆண்மையானக் கருத்தை உரையில் விதைத்திருந்தார் நாகப்பன்.
1 comment
















1 Comment
KamalaNathan Nakar Salapan
August 22, 2025, 5:07 pmஅருமை..
REPLY