ரொம்பின், ஆகஸ்ட் 25 — குவந்தான்–சிரம்பான் சாலையின் 142ஆம் கிலோமீட்டரில், புக்கிட் செரோக் (பண்டார் துண் அப்துல் ரசாக் அருகில்) பகுதியில் நேற்று மாலை நடந்த கொடூர விபத்தில் மூவர் உயிரிழந்தனர். பலியானவர்களில் மூன்று வயது சிறுமி ஒருவரும், 18 வயது இளம்பெண்ணும் அடங்குவர். பெரோடுவா மைவி கார் நெகிரி செம்பிலானின் பஹாவிலிருந்து ரொம்பின் முவாட்சாம் ஷா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த 4WD வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில், ஒரு பெண் சம்பவ இடத்திலேயே
ரொம்பின், ஆகஸ்ட் 25 — குவந்தான்–சிரம்பான் சாலையின் 142ஆம் கிலோமீட்டரில், புக்கிட் செரோக் (பண்டார் துண் அப்துல் ரசாக் அருகில்) பகுதியில் நேற்று மாலை நடந்த கொடூர விபத்தில் மூவர் உயிரிழந்தனர். பலியானவர்களில் மூன்று வயது சிறுமி ஒருவரும், 18 வயது இளம்பெண்ணும் அடங்குவர்.
பெரோடுவா மைவி கார் நெகிரி செம்பிலானின் பஹாவிலிருந்து ரொம்பின் முவாட்சாம் ஷா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த 4WD வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில், ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மீதமுள்ள ஆறு பேரும், உட்பட 4WD ஓட்டுநரும், முவாட்சாம் ஷா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த 18 வயது இளம்பெண்ணும் மூன்று வயது சிறுமியும் பின்னர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தோரின் உடல்கள், குவந்தானில் உள்ள தெங்கு அம்புவான் ஆஃப்சான் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன என்று நடந்த சம்பவத்தை, பகாங் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உறுதிப்படுதியதாக பெர்னாமா செய்தி அறிக்கை தெரிவித்தது.
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *