“உன்னை மிஸ் பண்றேன் அப்பா… வீட்டிற்கு வந்து உன்னைக் கட்டிப்பிடிக்க ஆவலாக இருக்கிறது”-

“உன்னை மிஸ் பண்றேன் அப்பா… வீட்டிற்கு வந்து உன்னைக் கட்டிப்பிடிக்க ஆவலாக இருக்கிறது”-

குவாந்தான், ஆகஸ்ட் 25 —“உன்னை மிஸ் பண்றேன் அப்பா… வீட்டிற்கு வந்து உன்னைக் கட்டிப்பிடிக்க ஆவலாக இருக்கிறது” — இதுவே சித்தி அவுனி சியாஃபிகா ஷேக் அலியின் (18) கடைசி வார்த்தைகள்.இன்று அந்த வார்த்தைகளே, அவரது தந்தை ஷேக் அலி ஷேக் முஸ்தபாவுக்கு (50) நெஞ்சை நெருடும் நிரந்தர நினைவுகளாக மாறியுள்ளன. வீடியோ அழைப்பின் கடைசி தருணம் மலாக்கா, அலோர் கஜாவில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டிருந்தபோது, தந்தையுடன் வீடியோ அழைப்பில் பேசிய சித்தி அவுனி

குவாந்தான், ஆகஸ்ட் 25 —
உன்னை மிஸ் பண்றேன் அப்பா… வீட்டிற்கு வந்து உன்னைக் கட்டிப்பிடிக்க ஆவலாக இருக்கிறது” — இதுவே சித்தி அவுனி சியாஃபிகா ஷேக் அலியின் (18) கடைசி வார்த்தைகள்.
இன்று அந்த வார்த்தைகளே, அவரது தந்தை ஷேக் அலி ஷேக் முஸ்தபாவுக்கு (50) நெஞ்சை நெருடும் நிரந்தர நினைவுகளாக மாறியுள்ளன.

வீடியோ அழைப்பின் கடைசி தருணம்

மலாக்கா, அலோர் கஜாவில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டிருந்தபோது, தந்தையுடன் வீடியோ அழைப்பில் பேசிய சித்தி அவுனி சியாஃபிகா, தனது 13 வயது தங்கை சித்தி அதவியா சயாக்கினாவுடன் இருந்தார்.
“நான் கடைசியாக அவர்களைச் சந்தித்தது வியாழக்கிழமை, அவர்கள் தங்கள் தாயுடன் அலோர் கஜாவுக்குச் செல்லும் முன்பே. சனிக்கிழமை மாலை, தஞ்சோங் மாலிமில் படித்துக்கொண்டிருந்த என் மூத்த குழந்தையுடனும், சியாஃபிகாவுடனும் வீடியோ அழைப்பு நடந்தது,” என்று கண்ணீர் மல்க நினைவு கூறினார் ஷேக் அலி.

இதயக் கோளாறுடன் போராடிய வீரமகள்

“என் மகள் சிறு வயதிலிருந்தே இதயக் கோளாறால் சிகிச்சை பெற்று வந்தாள். நான்கு வயதிலிருந்து தேசிய இதய நிறுவனத்திற்கு முன்னும் பின்னுமாகச் சென்று வந்தாலும், ஒருபோதும் பலவீனமடையவில்லை. ‘அவள் எப்போதும் வலிமையானவள்’ என்பதே என் நினைவின் முத்திரை,” என அவர் கூறினார்.
மேலும், சியாஃபிகாவுக்கு இன்னும் சில நாட்களில் இதய நிபுணருடன் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

விபத்துக் களத்தின் துயரம்

சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில், ஜாலான் பஹாவ்–கெரடோங்க், கம்போங் புக்கிட் செரோக் அருகே நடந்தது. குவாந்தானுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்கள் பயணித்த கார் சறுக்கி நான்கு சக்கர வாகனத்தில் மோதியது.
இந்த மோதலில் சித்தி அவுனி சியாஃபிகாவைச் சேர்த்து மூவர் உயிரிழந்தனர்; மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.

உயிர்க்காக போராடும் தங்கை

தற்போது, 13 வயது சித்தி அதவியா சயாக்கினா, தலை மற்றும் முகத்தில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனையில் (HTAA) உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறார்.
“என் மகள் இன்னும் சிகிச்சையில் உள்ளார். மருத்தவர்கள் அவரை காப்பாற்ற போராடுகிறார்கள். நாங்கள் அனைவரும் பிரார்த்திக்கிறோம்,” என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார் தந்தை.

விபத்தில் சிக்காத தாய்

ஷேக் அலியின் மனைவி சல்மீசா முகமது (46) வேறு வாகனத்தில் பயணித்ததால் விபத்தில் சிக்கவில்லை. இன்று அவர் தனது மகளின் பிரிவால் வாடும் குடும்பத்தினருடன் மருத்துவமனையில் துயர் பகிர்ந்து கொண்டார்-பெர்னாமா செய்தி

பரிந்துரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

அண்மை

சிறந்த ஆசிரியர்கள்

அதிக கருத்து

காணொளிகள்

வகையினம்