YSISS “எலிட்” தரப்புக்காக அல்ல- அமைச்சர் அன்வார் ரபாயி

YSISS “எலிட்” தரப்புக்காக அல்ல- அமைச்சர் அன்வார் ரபாயி

கூச்சிங், செப்டம்பர் 7 — யாயசான் சரவாக் இன்டர்நேஷனல் செகண்டரி ஸ்கூல்ஸ் (YSISS) நிறுவப்பட்டதன் நோக்கம், எலீட் தரப்புக்காக அல்ல, மாறாக புறநகர் மற்றும் குறைந்த வருமான (B40) மாணவர்களுக்கு உயர்தர கல்வி வாய்ப்புகளை வழங்குவதாக துணை கல்வி, புதுமை மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் டத்தோ டாக்டர் அன்வார் ரபாயீ தெளிவுபடுத்தினார்.

அவர் கூறுகையில், YSISS-இல் B40 மாணவர்கள் முற்றிலும் இலவசமாக படிக்கின்றனர். M40 குழுவினர் ஆண்டுக்கு RM1,200 (காலாண்டுக்கு RM300) செலுத்த வேண்டிய நிலையில், T20 குடும்ப மாணவர்கள் ஆண்டுக்கு RM4,200 (காலாண்டுக்கு RM1,050) கட்டணம் செலுத்துகின்றனர். இச்செலவில் பாடப்புத்தகங்கள், தினசரி உணவு மற்றும் பிற தேவைகள் அடங்கும், பயிற்சி புத்தகங்கள் மட்டும் விதிவிலக்கு.

தற்போது YSISS-இல் உள்ள மாணவர்களில் 60%க்கும் மேற்பட்டோர் B40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், T20 மாணவர்கள் 10%க்கும் குறைவாக உள்ளனர். “எந்த ஒரு மந்திரி அல்லது சட்டமன்ற உறுப்பினரின் குழந்தைகளும் YSISS-இல் படிக்கவில்லை,” எனவும் டாக்டர் அன்னுவார் வலியுறுத்தினார்.

இந்நேரம் சரவாகில் மூன்று YSISS பள்ளிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மேலும் மூன்று பள்ளிகள் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் நிறைவடையும் என்று அவர் தெரிவித்தார்.

YSISS-இன் சேர்க்கை முழுக்க முழுக்க திறமை அடிப்படையிலானது. இங்கு இனம் அல்லது சமூக அடிப்படையிலான ஒதுக்கீடு இல்லை. மாணவர்கள் கல்வி தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும். தற்போது சில மாணவர்கள் கேம்பிரிட்ஜ் IGCSE (சர்வதேச தேர்வு)க்கு தயாராகின்றனர்.

அதே சமயம், கேம்பிரிட்ஜ் IGCSE பாடத்திட்டம் மூலம் YSISS மாணவர்களுக்கு உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் கல்வி உதவித்தொகையுடன் சேரும் வாய்ப்பு உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பரிந்துரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

அண்மை

சிறந்த ஆசிரியர்கள்

அதிக கருத்து

காணொளிகள்

வகையினம்