FAM அதிர்ச்சி: ஜோஹரி விலகினார், யூசோஃப் செயல் தலைவராக பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 27 — மலேசிய கால்பந்து சங்கம் (FAM) அதிரடி மாற்றத்தைச் சந்தித்துள்ளது. தலைவர் டத்தோ முகமது ஜோஹரி முகமது அயூப் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். அவரது ராஜினாமாவை நிர்வாகக் குழு ஏற்றுக்கொண்டதாக உறுதிப்படுத்திய FAM, துணைத் தலைவர் டத்தோ முகமது யூசோஃப் மஹாடியை தற்காலிகத் தலைவராக நியமித்துள்ளது. 2017 முதல் துணைத் தலைவர் பதவியில் இருந்து செயல்பட்ட ஜோஹரி, பிப்ரவரி 2025-இல் தலைவராக
FAM அதிர்ச்சி: ஜோஹரி விலகினார், யூசோஃப் செயல் தலைவராக
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 27 — மலேசிய கால்பந்து சங்கம் (FAM) அதிரடி மாற்றத்தைச் சந்தித்துள்ளது. தலைவர் டத்தோ முகமது ஜோஹரி முகமது அயூப் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
அவரது ராஜினாமாவை நிர்வாகக் குழு ஏற்றுக்கொண்டதாக உறுதிப்படுத்திய FAM, துணைத் தலைவர் டத்தோ முகமது யூசோஃப் மஹாடியை தற்காலிகத் தலைவராக நியமித்துள்ளது.
2017 முதல் துணைத் தலைவர் பதவியில் இருந்து செயல்பட்ட ஜோஹரி, பிப்ரவரி 2025-இல் தலைவராக பொறுப்பேற்றார். ஆனால், இன்று முதல் அவரது காலம் நிறைவடைந்தது.
அடுத்த ஆண்டு நடைபெறும் காங்கிரஸில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என FAM அறிவித்துள்ளது.
 
																				



















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *