13ஆவது மலேசிய திட்டம் நிறைவேற்றம். பெரும்பான்மைக் குரல் வென்றது.

13ஆவது மலேசிய திட்டம்   நிறைவேற்றம். பெரும்பான்மைக் குரல் வென்றது.

13வது மலேசியா திட்டம், மக்களவை பெரும்பான்மை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 — 2026 – 2030 காலகட்டத்திற்கான நாட்டின் வியூக ஐந்தாண்டு வளர்ச்சி வரைபடமான 13வது மலேசியா திட்டம் குறித்த தீர்மானத்தை மக்களவை இன்று பெரும்பான்மை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியது. 13ஆவது மலேசிய திட்டத் தீர்மானம், ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்கி எட்டு நாட்கள் விவாதிக்கப்பட்டது. இதில் 161 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர், அதைத் தொடர்ந்து நான்கு நாள்

13வது மலேசியா திட்டம், மக்களவை பெரும்பான்மை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 — 2026 – 2030 காலகட்டத்திற்கான நாட்டின் வியூக ஐந்தாண்டு வளர்ச்சி வரைபடமான 13வது மலேசியா திட்டம் குறித்த தீர்மானத்தை மக்களவை இன்று பெரும்பான்மை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியது.

13ஆவது மலேசிய திட்டத் தீர்மானம், ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்கி எட்டு நாட்கள் விவாதிக்கப்பட்டது. இதில் 161 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர், அதைத் தொடர்ந்து நான்கு நாள் அமைச்சரவை நிறைவு அமர்வு இன்று முடிவடைந்தது.

இன்றைய அமர்வில், சுகாதார அமைச்சகம், டிஜிட்டல் அமைச்சகம் மற்றும் பொருளாதார அமைச்சகம் உட்பட ஆறு அமைச்சகங்கள் தங்கள் நிறைவு உரைகளை வழங்கின.

13ஆவது மலேசியத் திட்டம் : மக்கள் நலனும் வளர்ச்சியும் முன்னிலை

பிரதமர் தத்துக் ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், “வளர்ச்சியை மறுவடிவமைத்தல்” (Melakar Semula Pembangunan) என்ற தலைப்பில், 13ஆவது மலேசியத் திட்டத்தை (13MP) பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.
இந்தத் திட்டம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்கான வழிகாட்டி ஆகும்.இது மூன்று முக்கிய இலக்குகளை மையமாகக் கொண்டுள்ளது:

1.பொருளாதார வளர்ச்சியை உயர்த்துதல்,
2.மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்,
3.நல்ல நிர்வாகத்தை வலுப்படுத்துதல்.

13ஆவது மலேசியத் திட்டத்தில், 4 முக்கிய திசைகள், 27 முன்னுரிமைகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட செயல்திட்டங்கள் அடங்கியுள்ளன. டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) வழியாக மலேசியா முன்னேற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வளர்ச்சியின் பலன்கள் அனைத்து மாநிலங்களுக்கும், சமூகங்களுக்கும், தலைமுறைகளுக்கும் சமமாகச் சென்றடைய வேண்டும் என்பதும் முக்கிய குறிக்கோளாகும்.

பாராளுமன்ற விவாதத்தில் முன்வைக்கப்பட்ட முக்கியக் கோரிக்கைகள்

  1. ஓய்வூதிய வசதி – ஓய்வுபெற்றவர்கள் தங்கள் EPF சேமிப்புகளை மாதந்தோறும் பெறும் விருப்ப முறை அமைக்க வேண்டும்.
  2. கல்வி மாற்றம் – கல்வி அமைப்பை மேம்படுத்த புதிய கல்விக் கொள்கைகள் கொண்டு வரப்பட வேண்டும்.
  3. படைப்பாற்றல் பொருளாதாரம் (Orange Economy) – கலை, கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றல் துறைகளை வளர்த்து, மலேசியாவின் பொருளாதாரத்தில் புதிய வலிமை சேர்க்க வேண்டும்.

13ஆவது மலேசியத் திட்டம் என்பது பொருளாதாரம், மக்களின் நலம், மற்றும் நல்ல நிர்வாகம் ஆகிய மூன்றையும் முன்னிலைப்படுத்தும் வளர்ச்சித் திட்டம். அதோடு, ஓய்வூதிய முறை, கல்வி மாற்றம் மற்றும் படைப்பாற்றல் பொருளாதாரம் ஆகியவை பாராளுமன்ற விவாதத்தில் முக்கியமாகப் பேசப்பட்டன.

மக்களவை அமர்வு திங்கட்கிழமையும் தொடர்கிறது. – பெர்னாமா

பரிந்துரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

அண்மை

சிறந்த ஆசிரியர்கள்

அதிக கருத்து

காணொளிகள்

வகையினம்