ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம், சூடான் நிலச்சரிவில் உயிரிழப்புகள் குறித்து பிரதமர் அன்வார் அனுதாபம்
கோலாலம்பூர்: செப்டம்பர் 3
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கமும், சூடானில் நிகழ்ந்த கடுமையான நிலச்சரிவும் பல உயிரிழப்புகளை ஏற்படுத்திய நிலையில், மலேசியா ஆழ்ந்த அனுதாபத்துடன் இரு நாடுகளின் மக்களுடன் ஒற்றுமையாக நிற்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், இவ்விரு பேரழிவுகளிலும் ஏற்பட்ட துயரமும் இழப்பும் மலேசிய மக்களையும் ஆழமாக பாதித்துள்ளதாக குறிப்பிட்டார்.
“ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த நிலநடுக்கம் பல குடும்பங்களை சோகத்திலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. சூடானில் நிலச்சரிவால் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறித்த செய்தி என்னை அதிர்ச்சியடைய வைத்தது,” என்று பிரதமர் கூறினார்.
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியை தாக்கிய 6.0 ரிக்டர் நிலநடுக்கம் இதுவரை 1,400-க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்துள்ளது. சூடானில் நிலச்சரிவினால் ஏற்பட்ட பெரும் உயிரிழப்புகள் அந்நாட்டு மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளன.
மலேசியா இவ்விரு நாடுகளின் மக்களுடன் முழுமையான ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்துவதாகவும், அவர்களின் துயரத்தைக் குறைக்கும் முயற்சிகளில் பன்னாட்டு சமூகம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதாகவும் பிரதமர் அன்வார் தெரிவித்தார்.
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *