மலேசியர்கள் எனும் உணர்வோடு நீடித்து வாழ்வோம் – தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்

மலேசியர்கள் எனும் உணர்வோடு நீடித்து வாழ்வோம் – தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்

கோலாலம்பூர், செப்டம்பர் 16:
“இனம், மதம், மொழி எதுவாயினும் – நாம் அனைவரும் மலேசியர்கள் எனும் பெருமித உணர்வோடு நீடித்து வாழ வேண்டும்,” என்று ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் மலேசிய தின வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தினார்.

அவர் கூறியதாவது:
“பல்வேறு பின்னணியிலிருந்தாலும், மலேசியர்கள் வேற்றுமையில் ஒற்றுமையுடன் வாழும் தனித்துவமான பண்பாட்டை உலகம் முழுவதும் பெருமையுடன் பார்க்கிறது. ஒவ்வொரு பெருநாளிலும் திறந்த இல்ல உபசரிப்பின் மூலம் அனைவரையும் இணைக்கும் மரபு நம் நாட்டின் உண்மையான பலம். இந்த ஒன்றிப்பிணைந்த வாழ்க்கை முறையையே நாம் தலைமுறைகளுக்கும் நிலைநிறுத்த வேண்டும்.”

விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டார்:
“மலேசியர்கள் பல்வேறு வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரத்தில் வாழ்ந்தாலும், உணவு, பண்டிகை, கொண்டாட்டங்களில் ஒரே ஒற்றுமையைக் காணலாம். அது நமது அடையாளம். குடும்பத்திலும் சமூகத்திலும் அன்பு, புரிந்துணர்வு, விட்டுக்கொடுத்தல் ஆகியவை உறுதியாக நிலைக்க வேண்டும். ஒற்றுமை உணர்வு எல்லா இடங்களிலும் பரவியிருக்க வேண்டும்.”

“நம்பிக்கையோடு ஒற்றுமையாய் வாழ்வோம், ஒன்றுபட்டு முன்னேறுவோம். ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்ற தமிழரின் வாழ்வியல் கூற்று மலேசியர்களின் ஒற்றுமைக்கு எப்போதும் உண்மையான வழிகாட்டியாக இருக்கும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

பரிந்துரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

அண்மை

சிறந்த ஆசிரியர்கள்

அதிக கருத்து

காணொளிகள்

வகையினம்