மலாக்கா-செப்டம்பர் – 27
மலாக்கா மாநிலத்தில் நடைபெற்று வரும் உலக சுற்றுலா தினக் கர்னிவல் மற்றும் மலேசியாவை பார்வையிடும் ஆண்டு துவக்க விழாக்கு தபோ நானிங் தொகுதி இளைஞர் பிரதிநிதி குகன் ராம் தனது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளார்.

குகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்த சர்வதேச நிகழ்ச்சி மலாக்காவிற்கு பல்வேறு அர்த்தங்களைக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
அதாவது, மலாக்காவின் வரலாறு, பண்பாட்டு மரபு மற்றும் அழகிய இயற்கையின் அடிப்படையில் மாநிலத்தை உலகத் தரச் சுற்றுலா தலமாக கௌரவிப்பது, உள்ளூர் தொழில் முனைவோர் மற்றும் ஹோம்-ஸ்டே உரிமையாளர்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவது, விருந்தோம்பல் மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது எனப் பல நன்மைகள் கிடைக்கும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், இளைஞர்கள் தன்னார்வலர்களாகவும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாகவும் மட்டுமல்லாமல், படைப்பாற்றல், டிஜிட்டல் மற்றும் சுற்றுலா தொழில்களில் புதிய தலைமுறை தொழில் முனைவோராக ஈடுபட முடியும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
“இந்த முயற்சி மலேசியாவிற்கு கோடிக்கணக்கான சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தேசிய இலட்சியத்துடன் இணங்குகிறது. மலாக்கா மாநிலத்தின் இளைஞர்கள் திறமை, புதுமை மற்றும் போட்டித்தன்மையுடன் முன்னேற்றத்தின் இயந்திரமாக தொடர வேண்டும்,” என குகன் ராம் தெரிவித்துள்ளார்.
அவர் இறுதியில், மலாக்காவை உலகின் முன்னணி சுற்றுலா தலமாக நிலைநிறுத்த அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
#WorldTourismDay2025
#BijakLaksanaTuah
#BeraniLaksanaJebat
#BeliaMelaka
 
																				


















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *