கோலாலம்பூர், ஆகஸ்ட் 25 — காசா மீது இஸ்ரேலின் கட்டுப்பாடு செலுத்தும் முயற்சியை மலேசியா “நவீன காலனித்துவம்” என்றும், “உலகின் அனைத்து ராஜதந்திர முயற்சிகளுக்கும் அவமானம்” என்றும் கண்டித்துள்ளது. சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) வெளியுறவு அமைச்சர்கள் அசாதாரண கூட்டத்தில், மலேசியாவின் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான், காசா மீது இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு திட்டம் பாலஸ்தீன நிலங்களை நிரந்தரமாக கைப்பற்றும் அதிரடியான முயற்சி என சுட்டிக்காட்டினார். “இது சாதாரண நடவடிக்கை
கோலாலம்பூர், ஆகஸ்ட் 25 — காசா மீது இஸ்ரேலின் கட்டுப்பாடு செலுத்தும் முயற்சியை மலேசியா “நவீன காலனித்துவம்” என்றும், “உலகின் அனைத்து ராஜதந்திர முயற்சிகளுக்கும் அவமானம்” என்றும் கண்டித்துள்ளது.
சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) வெளியுறவு அமைச்சர்கள் அசாதாரண கூட்டத்தில், மலேசியாவின் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான், காசா மீது இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு திட்டம் பாலஸ்தீன நிலங்களை நிரந்தரமாக கைப்பற்றும் அதிரடியான முயற்சி என சுட்டிக்காட்டினார்.
“இது சாதாரண நடவடிக்கை அல்ல; இது நீண்டகாலமாக இருந்த ‘பெரிய இஸ்ரேல்’ கனவின் வெளிப்படையான விரிவாக்கம்,” என்று அவர் கூறினார்.
பொதுமக்கள் மீது கொடூர தாக்குதல்
முகமது ஹசான், இஸ்ரேல் பொதுமக்களை பாதுகாக்கும் வேண்டுகோள்களையும், மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும் என்ற சர்வதேச சமூகத்தின் தொடர்ந்து விடுக்கப்பட்ட அழைப்புகளையும் புறக்கணித்து, வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டினார்.
“உணவு, மருந்து கொண்டு வந்தவர்களைத் தாக்கி, காசா மக்களை பட்டினியால் வாட வைத்தனர். ஐ.நா கூட காசாவில் பஞ்சம் நிலவுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது,” என்றார்.
பிராந்திய அமைதிக்கே அச்சுறுத்தல்
இஸ்ரேலின் வன்முறை பாலஸ்தீனத்தில் மட்டுமே முடிவடையாது; அது பிராந்தியத்தை விரிவாக்கம் செய்யும் நோக்கத்துடன் தொடர்ந்து நிலங்களை கைப்பற்றும் என அமைச்சர் எச்சரித்தார்.
“இஸ்ரேலின் நோக்கம் ஒருபோதும் நின்றுவிடாது. அமைதியையும், தாக்குதல் இடைநிறுத்தத்தையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இது முழு பிராந்தியத்தின் நிலைத்தன்மைக்கே ஆபத்து,” என்று அவர் வலியுறுத்தினார்.
இஸ்லாமிய ஒற்றுமைக்கு அழைப்பு
மலேசியா, பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிவாரண முகமை(UNRWA)மற்றும் பிற வழிகள் மூலம் உதவிகளை வழங்கி வந்ததாகவும், ஆனால் இஸ்ரேலின் தடைகள் காரணமாக பல முயற்சிகள் தடையடைந்ததாகவும் அவர் கூறினார்.
“உம்மத் ஒன்று திரண்டால் மட்டுமே இந்த கொடூரங்களை நிறுத்த முடியும். ஒருநாள் கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட சுதந்திரமான பாலஸ்தீன நாடு உருவாகும். அந்த நாள் வரும் வரை, நாமெல்லாம் தினமும் குரல் கொடுக்க வேண்டும்,” என்று அவர் உறுதியளித்தார்.
மனிதாபிமான பேரழிவு
2023 அக்டோபர் முதல், இஸ்ரேல் காசா மீது நடத்திய தாக்குதலில் 62,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். காசா தற்போது முழுமையான பேரழிவு நிலைக்குத் தள்ளப்பட்டு, பஞ்சம் மற்றும் கடுமையான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்கிறது. — பெர்னாமா
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *