கண்ணோட்டம்: தமிழ்ப் பள்ளி மாணவர்களை கசிந்த கூரையின் கீழ் படிக்கச் சொல்ல முடியாது.

கண்ணோட்டம்: தமிழ்ப் பள்ளி மாணவர்களை கசிந்த கூரையின் கீழ் படிக்கச் சொல்ல முடியாது.

முன்னாள் துணை முதலமைச்சர் ப. இராமசாமி சமீபத்தில் வெளிப்படுத்திய விமர்சனம், நம் கல்விக் கொள்கையின் அடிப்படை பிழையைத் துல்லியமாகக் காட்டுகிறது.

நாட்டின் 560-க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள RM19 மில்லியன் என்பது, கல்வி அமைச்சகத்தின் RM60 பில்லியன் பட்ஜெட்டில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, பெருங்கடலில் ஒரு துளியே.

அரசின் நிலைப்பாடு “அர்ப்பணிப்பு” என்று சொல்லப்பட்டாலும், நிஜத்தில் இது “அக்கறையின்மை” என்பதை மறைக்க முடியாது. தமிழ் பள்ளிகள் இன்று எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் — சிதைந்த கட்டமைப்பு, வசதி குறைவு, சேர்க்கை வீழ்ச்சி — இவற்றை இந்த அளவிலான தொகை தீர்க்காது.

தமிழ் பள்ளிகளின் நிலைமை

புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையக் காரணம் வெறும் மக்கள் தொகை குறைவல்ல; மாறாக, தரமான கட்டமைப்பின் பினாய்வு தான். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அனுப்ப தயங்குவதற்கு காரணம், அடிப்படை வசதிகளின் இல்லாமை.

பினாங்கில் கட்டட வசதிகள் மேம்படுத்தப்பட்டபோது மாணவர் சேர்க்கை உயர்ந்தது என்ற ப. இராமசாமியின் அனுபவம், ஒரு பள்ளியின் எதிர்காலத்தை வசதிகளும் தீர்மானிப்பதை நிரூபிக்கிறது.

அரசின் பொறுப்பு

தமிழ் பள்ளிகளை மேம்படுத்துவது வெறும் அரசியல் அறிக்கைகளால் முடியும் விஷயம் அல்ல. “மொழி, கலாச்சாரம், பாரம்பரியம்” எனப் பேசிக்கொண்டே, அந்தக் குழந்தைகளுக்கு கசிந்த கூரையின் கீழ் படிக்கச் சொல்ல முடியாது.

அரசாங்கம் தனது பொறுப்பை உண்மையாக ஏற்றுக்கொண்டால், குறைந்தபட்சம் தேசிய மற்றும் சீனத் தாய்மொழி பள்ளிகளுக்கு அளிக்கப்படும் அளவிற்கு சீரான வசதிகள் தமிழ் பள்ளிகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.

எங்கள் குரல்

இன்று ஒதுக்கப்பட்டுள்ள RM19 மில்லியன், பெருங்கடலில் ஒரு துளியாக மட்டுமே உள்ளது. ஆனால், அந்தத் துளி கூட தமிழ் பள்ளிகள் மூடப்படாமல் காப்பாற்றாது.

தமிழ் கல்வியின் எதிர்காலம் ஆபத்தில் இருக்கிறது என்பதே உண்மை. இதை புறக்கணித்தால், நாளை பள்ளிகள் மூடப்படும்போது அரசாங்கம் மட்டும் அல்ல, சமூகமும் வரலாற்றின் முன் கேள்விக்குள்ளாகும்.

கரிகாலன், ஜடாயூ

பரிந்துரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

அண்மை

சிறந்த ஆசிரியர்கள்

அதிக கருத்து

காணொளிகள்

வகையினம்