பெட்ரோல் மானியங்கள் இலக்கு மானிய முறையாக மாறுகிறதா?

பெட்ரோல் மானியங்கள் இலக்கு மானிய முறையாக மாறுகிறதா?

மலேசிய அரசு RON95 பெட்ரோல் மானியங்களை மாற்றி இலக்கு மானிய முறையில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதன் பொருள் – எல்லோருக்கும் சமமாக அல்லாமல், வருமானம், சொத்து, மற்றும் சொகுசு கார் வைத்திருப்பது போன்ற காரணிகளை வைத்து யாருக்கு மானியம் வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப் போகிறார்கள். முக்கிய அம்சங்கள்: 1. அரசின் திட்டம் மாதாந்திர வருமானம் மட்டுமல்லாமல், வீடு, நிலம் போன்ற சொத்துகள் வைத்திருப்பதையும், சொகுசு வாகனங்களின் உரிமை இருப்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்போறார்கள். 2.

மலேசிய அரசு RON95 பெட்ரோல் மானியங்களை மாற்றி இலக்கு மானிய முறையில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதன் பொருள் – எல்லோருக்கும் சமமாக அல்லாமல், வருமானம், சொத்து, மற்றும் சொகுசு கார் வைத்திருப்பது போன்ற காரணிகளை வைத்து யாருக்கு மானியம் வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப் போகிறார்கள்.

முக்கிய அம்சங்கள்:

1. அரசின் திட்டம்

மாதாந்திர வருமானம் மட்டுமல்லாமல், வீடு, நிலம் போன்ற சொத்துகள் வைத்திருப்பதையும்,

சொகுசு வாகனங்களின் உரிமை இருப்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்போறார்கள்.

2. நிபுணர்கள் கூறுவது

இந்த மாதிரி அளவுகோல்கள் வைக்கும்போது, யார் தகுதி, யார் தகுதியற்றவர் என்று தெளிவாக தீர்மானிப்பது சிரமம்.பெட்ரோல் நிலையங்களில் இதற்கான தொழில்நுட்ப மேம்பாடுகள் செய்ய கூடுதல் செலவு வரும்.அதனால், சேமிக்க நினைத்த பணத்தை விட கூடுதல் செலவு ஆகக்கூடும்.

3. பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறியது

நிதி அமைச்சராக அவர் சொன்னது:

உள்நாட்டு வருவாய் வாரியம் (LHDN) மற்றும் புள்ளிவிவரத் துறை தரவுகளை அடிப்படையாக வைத்து முடிவு செய்யப்படும்.இந்த மாற்றம் 85% மலேசியர்களுக்கு பாதிப்பு இல்லை.அதிக வருமானம் உள்ளவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் மட்டும் RON95-க்கு மானியமின்றி முழு விலையை செலுத்த வேண்டும்.இறுதி முடிவு செப்டம்பர் இறுதிக்குள் எடுக்கப்படும்.

அரசு பெட்ரோல் மானியத்தை குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கே அளிக்க திட்டமிட்டுள்ளது.சொத்து, சொகுசு கார் வைத்திருப்பவர்கள் “அரசு உதவி தேவையில்லாதவர்கள்” என கருதப்படுவார்கள்.ஆனால் இதை நடைமுறைப்படுத்துவது சிக்கலானது; கூடுதல் செலவு, அரசியல் எதிர்ப்புகள் போன்ற பிரச்சினைகள் உருவாகலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள் – நன்றி CNA

பரிந்துரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

அண்மை

சிறந்த ஆசிரியர்கள்

அதிக கருத்து

காணொளிகள்

வகையினம்