சோறிட்ட உறவுகள்!

சோறிட்ட உறவுகள்!

இரா.சரவணதீர்த்தா, மலாக்கா சோறிட்ட உறவுகளைதாழிட்டு விரட்டவேர்விட்ட கருவதனைவேரறுக்க வந்தாய்! உடன் படிக்கை அட்டையெனஉதிரத்தை உறிஞ்சிபூதத்தை ஏவி விட்டுவேதத்தைத் திறந்தாய்! அயல்நாட்டு ஆதரவைபூசிமெழுகிப்பெற்றுசுயநாட்டுச் சரித்திரத்தைசுயமாக்கிக்கொண்டாய்! தாய்மண்ணில் ஒண்டவந்துதமிழ்கருவைத்தின்றுயாழ்பிடித்த விரல்களில்சீழ்பிடிக்கச்செய்தாய்! முரத்தாலே விரட்டியபுலியென்று நினைத்துதுடைத் தொழிக்கப் புலியதனைதுடைப்பங்கொண்டு நின்றாய்! எலிவாலைப் பிடித்துநின்றுபுலிவாலென்று நினைத்துமடையர்களை மயிராலெமலையிழுக்க வைத்தாய்! கொட்ட கொட்டகுனிவாரென்றுராஜபக்சே கணித்தாய்ஒட்ட நறுக்க வனப்புலியைராஜதந்திரி பணித்தான்! வைரிகளைப் பெயர்த்தெடுக்கவான்புலியாய் பறந்தான்யாழெடுத்து இன்பம் சேர்க்கயாழ்மகன் எழுந்தான்! ( மூலம் : பதிவுகள் இணையத்தளம்)


இரா.சரவணதீர்த்தா
, மலாக்கா


சோறிட்ட உறவுகளை
தாழிட்டு விரட்ட
வேர்விட்ட கருவதனை
வேரறுக்க வந்தாய்!

உடன் படிக்கை அட்டையென
உதிரத்தை உறிஞ்சி
பூதத்தை ஏவி விட்டு
வேதத்தைத் திறந்தாய்!

அயல்நாட்டு ஆதரவை
பூசிமெழுகிப்பெற்று
சுயநாட்டுச் சரித்திரத்தை
சுயமாக்கிக்கொண்டாய்!

தாய்மண்ணில் ஒண்டவந்து
தமிழ்கருவைத்தின்று
யாழ்பிடித்த விரல்களில்
சீழ்பிடிக்கச்செய்தாய்!

முரத்தாலே விரட்டிய
புலியென்று நினைத்து
துடைத் தொழிக்கப் புலியதனை
துடைப்பங்கொண்டு நின்றாய்!

எலிவாலைப் பிடித்துநின்று
புலிவாலென்று நினைத்து
மடையர்களை மயிராலெ
மலையிழுக்க வைத்தாய்!

கொட்ட கொட்டகுனிவாரென்று
ராஜபக்சே கணித்தாய்
ஒட்ட நறுக்க வனப்புலியை
ராஜதந்திரி பணித்தான்!

வைரிகளைப் பெயர்த்தெடுக்க
வான்புலியாய் பறந்தான்
யாழெடுத்து இன்பம் சேர்க்க
யாழ்மகன் எழுந்தான்!

( மூலம் : பதிவுகள் இணையத்தளம்)

பரிந்துரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

அண்மை

சிறந்த ஆசிரியர்கள்

அதிக கருத்து

காணொளிகள்

வகையினம்