“அரசாங்க நிதி மக்களுக்கானது, கட்சிக்கானது அல்ல”- அந்தோனி லோக் வலியுறுத்தல்

“அரசாங்க நிதி மக்களுக்கானது, கட்சிக்கானது அல்ல”- அந்தோனி லோக் வலியுறுத்தல்

ஈப்போ, ஆகஸ்ட் 25 — “அரசாங்க நிதி மக்களுக்கானது, கட்சிக்கானது அல்ல” என்ற தெளிவான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார் டிஏபி ( ஜனநாயக செயல் கட்சி) பொதுச் செயலாளர் அந்தோனி லோக் சியூ ஃபூக். நேற்று இரவு ஈப்போவில் நடைபெற்ற டிஏபி நிதி திரட்டும் இரவு விருந்தில் உரையாற்றிய அவர், அரசு மற்றும் கட்சியைப் பிரித்து நடத்துவது தான் டிஏபியின் ஒழுக்க நெறி எனத் தெரிவித்தார். “டிஏபி அரசு கூட்டணியின் ஓர் அங்கமாக இருந்தாலும், எங்கள் நிகழ்ச்சிகள்

ஈப்போ, ஆகஸ்ட் 25 — “அரசாங்க நிதி மக்களுக்கானது, கட்சிக்கானது அல்ல” என்ற தெளிவான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார் டிஏபி ( ஜனநாயக செயல் கட்சி) பொதுச் செயலாளர் அந்தோனி லோக் சியூ ஃபூக்.

நேற்று இரவு ஈப்போவில் நடைபெற்ற டிஏபி நிதி திரட்டும் இரவு விருந்தில் உரையாற்றிய அவர், அரசு மற்றும் கட்சியைப் பிரித்து நடத்துவது தான் டிஏபியின் ஒழுக்க நெறி எனத் தெரிவித்தார்.

“டிஏபி அரசு கூட்டணியின் ஓர் அங்கமாக இருந்தாலும், எங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் உறுப்பினர்களின் ஆதரவு மற்றும் நன்கொடை மூலமே நடைபெறுகின்றன. அரசாங்க நிதியை கட்சிக்காக எப்போதும் பயன்படுத்தமாட்டோம்,” என்று அவர் வலியுறுத்தினார்.

மக்கள் ஆதரவே முக்கியம்

லோக் கூறியதாவது, அரசாங்கத்தின் ஒதுக்கீடுகள் நாட்டின் முன்னேற்றத்திற்கும் பொதுமக்களின் நலனுக்குமே செலவிடப்பட வேண்டும். அதேசமயம், டிஏபி கட்சியின் செயல்பாடுகளுக்கு மக்கள் தொடர்ந்து தன்னார்வ நிதியுதவி வழங்குவதாகவும், அது கட்சியின் போராட்டத்தில் மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

பொருளாதாரக் கவனம் – ஒற்றுமை அரசாங்கம்

போக்குவரத்து அமைச்சராகவும் உள்ள லோக், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் தற்போது நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முயற்சியில் அதிக கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார். மக்களின் வாழ்க்கை எளிதாகவும், வாழ்க்கைத் தரம் உயர்வதற்கும் அரசு செயல்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.

நிதி திரட்டும் இயக்கம் துவக்கம்

இந்த இரவு விருந்தின் போது, பேராக் மாநில டிஏபிக்கான நிதி திரட்டும் இயக்கமும் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

பரிந்துரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

அண்மை

சிறந்த ஆசிரியர்கள்

அதிக கருத்து

காணொளிகள்

வகையினம்