வேப் விற்பனைக்குத் தடை செய்யும் ஐந்தாவது மாநிலமாக பேராக் இடம்பெறுமா?

வேப் விற்பனைக்குத் தடை செய்யும் ஐந்தாவது மாநிலமாக பேராக் இடம்பெறுமா?

ஈப்போ, ஆகஸ்ட் 23 — பேராக்கில் மின்னணு சிகரெட்டுகள் அல்லது வேப் விற்பனையைத் தடை செய்வது குறித்த முழுமையான பணி அறிக்கை அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெறும். இது மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சாட்தியமானால் மலேசியாவில் வேப் விற்பனைக்குத் தடை செய்யும் ஐந்தாவது மாநிலமாக பேராக் மாநிலம் இடம்பெறும்.உள்ளூர் அதிகாரிகள் வேப் விற்பனை உரிமங்களை வழங்குவதைத் தடுப்பதில் இந்த நடவடிக்கை கவனம் செலுத்தும் என்று மாநில மனிதவளம், சுகாதாரம், இந்திய

ஈப்போ, ஆகஸ்ட் 23 — பேராக்கில் மின்னணு சிகரெட்டுகள் அல்லது வேப் விற்பனையைத் தடை செய்வது குறித்த முழுமையான பணி அறிக்கை அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெறும். இது மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சாட்தியமானால் மலேசியாவில் வேப் விற்பனைக்குத் தடை செய்யும் ஐந்தாவது மாநிலமாக பேராக் மாநிலம் இடம்பெறும்.

உள்ளூர் அதிகாரிகள் வேப் விற்பனை உரிமங்களை வழங்குவதைத் தடுப்பதில் இந்த நடவடிக்கை கவனம் செலுத்தும் என்று மாநில மனிதவளம், சுகாதாரம், இந்திய சமூக விவகாரங்கள் மற்றும் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் ஏ. சிவனேசன் தெரிவித்தார்.

“ஒரு முழுமையான தடை மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் வருகிறது, ஆனால் விற்பனையைக் கட்டுப்படுத்த உரிமம் வழங்குவதைத் தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது.

“இந்த நடவடிக்கை வெற்றி பெற்றால், வேப் விற்பனையைத் தடை செய்யும் ஐந்தாவது மாநிலமாக பேராக் மாறும்,” என்று அவர் இன்று இங்குள்ள பேராக் டாருல் ரிட்சுவான் கட்டிடத்தில், மாநில அளவிலான ‘ஓபராசி செலாமாட் பாரு-’வைத் தொடங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஜோகூர், கிளந்தான், தெரெங்கானு, பெர்லிஸ், கெடா மற்றும் பகாங் உள்ளிட்ட பல மலேசிய மாநிலங்கள் வேப் விற்பனையைத் தடை செய்துள்ளன அல்லது வணிக உரிமங்களை வழங்க மறுத்து வருகின்றன. இந்தத் தடைகள் நுகர்வுக்கு பதிலாக விற்பனையில் கவனம் செலுத்துகின்றன, ஏனெனில் மத்திய அரசு நாடு தழுவிய பயன்பாட்டுத் தடையை அமல்படுத்தவில்லை, மாறாக தயாரிப்புகளை ஒழுங்குபடுத்த பொது சுகாதாரத்திற்கான புகைபிடிக்கும் பொருட்களின் கட்டுப்பாட்டுச் சட்டம் 2024 (சட்டம் 852) ஐ அறிமுகப்படுத்தியது.

பரிந்துரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

அண்மை

சிறந்த ஆசிரியர்கள்

அதிக கருத்து

காணொளிகள்

வகையினம்