காசா, செப்.11 –
காசாவில் மனிதாபிமான உதவிக் கூடங்கள் பாதுகாப்பு சர்ச்சையில் சிக்கியுள்ளன.
பிபிசி நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த “இன்பிடல்ஸ் மோட்டார் சைக்கிள் கும்பல்” உறுப்பினர்கள் காசாவில் பாதுகாப்புப் பொறுப்பில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இக்கும்பல் நீண்டநாட்களாக முஸ்லீம் எதிர்ப்பு சின்னங்கள் மற்றும் கருத்துக்களால் அறியப்பட்ட ஒன்று.
அதன் உறுப்பினர்கள் அமெரிக்க தனியார் பாதுகாப்பு நிறுவனம் UG Solutions வழியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) உதவிக் கூடங்களில் பணிபுரிகிறார்கள்.
பத்து பேருக்கும் மேற்பட்டோர் இதில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஏழு பேர் உயர்நிலை பொறுப்பில் இருப்பதாக பிபிசி தெரிவித்துள்ளது.
குற்றச்சாட்டு
உதவி பெற வந்த பொதுமக்கள் மீது அச்சுறுத்தல் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிலர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
UG Solutions நிறுவனம் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
“எங்கள் பணியாளர்கள் அனைவரும் பின்னணி ஆய்வைச் சந்தித்துள்ளனர். மதம் அல்லது தனிப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் வேறுபாடு இல்லை,” என்று நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அமைப்பின் நிலை
GHF, “எங்களுக்கு பாகுபாடு மற்றும் வெறுப்புக்கு இடமில்லை. சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்று வலியுறுத்தியுள்ளது.
மனிதாபிமானக் கவலை
முஸ்லீம் எதிர்ப்பு கும்பல் உறுப்பினர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவது, உள்ளூர் மக்களிடம் பயத்தையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
“உதவி கூடங்கள் மக்களின் உயிர் காப்பதற்கான இடமாக இருக்க வேண்டும். ஆனால் இப்போது அவை அச்சம் நிறைந்த இடங்களாக மாறுகின்றன,” என பிபிசி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
 
																				



















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *