கோலாலம்பூர், செப்டம்பர் 13 – கல்வி சம வாய்ப்பு மலேசிய அரசியலில் அடிக்கடி வாக்குறுதியாக ஒலித்தாலும், இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் அடிக்கடி நிராகரிக்கப்படுவதாக சமூகக் குழுக்கள் குற்றம் சாட்டுகின்றன.
பல்கலை நுழைவில் “Merit” என்ற கொள்கை சமத்துவமாகத் தோன்றினாலும், அடிப்படை வளங்கள் சமமாக வழங்கப்படாத சூழலில் அது அநியாயமாகப் பயன்படுத்தப்படுகிறது. “அனைவரும் ஒரே கோட்டில் ஓடுகிறார்கள்” என்றாலும், சிலரின் பாதையில் பள்ளம் வெட்டப்பட்டிருப்பது போல நிலைமை இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மெட்ரிகுலேஷன், STPM, சிறப்பு ஒதுக்கீடுகள்—இவை அனைத்தும் ஆண்டுதோறும் அரசியல்வாதிகளால் அதிகப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இந்திய மாணவர்களுக்கு “இடமில்லை” என்ற அறிவிப்புதான் அதிகமாக வருகிறது.
“12% அதிகரித்துள்ளது” என்ற புள்ளிவிவரம் அடிக்கடி அரசியல் பேச்சில் ஒலித்தாலும், அந்த அதிகரிப்பு யாருக்கு, எந்தத் துறையில் வழங்கப்பட்டுள்ளது என்ற வெளிப்படைத்தன்மை இல்லை.
பல மாணவர்கள் மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற துறைகளில் விண்ணப்பிக்கும் போது “கோப்பு முழுமையில்லை”, “அமைப்பு புதுப்பிக்கப்படுகிறது” அல்லது “தரநிலை மாற்றப்பட்டுள்ளது” போன்ற காரணங்களால் வாய்ப்பு மறுக்கப்படுவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.
அரசியல் மேடையில் “சம உரிமை” என்று ஒலிக்கிறது. ஆனால் நடைமுறையில் இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் அடிக்கடி நிராகரிக்கப்படுகின்றன.
ஊடகங்கள் பக்கங்கள் நம் பக்கம்
*2021-ஆம் ஆண்டு வெளியான Malay Mail சர்வே படி, பள்ளிகளில் ஒவ்வொரு இரண்டில் ஒருவரும் பாகுபாடு அனுபவித்துள்ளனர். அதில் இந்திய மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். (Malay Mail, 16 Sept 2021)
*Free Malaysia Today 2023-ல் வெளிவந்த செய்தியில், பல்கலைக்கழகக் கோட்டாக்கள் “Social Contract” பெயரில் நியாயப்படுத்தப்படுவதை, கல்வி நிபுணர்கள் “பாகுபாடே” என்று கண்டித்தனர். (FMT, 26 Nov 2023)
*The Coverage 2025-ல் வெளியிட்ட கருத்துக் கட்டுரையில், “Educational Apartheid” என்ற சொல்லையே பயன்படுத்தி, non-Malay மாணவர்களின் நிலையை கடுமையாகச் சாடியது.
ஆய்வாளர்கள் கல்வி துறையில் உடனடி மாற்றங்கள் அவசியம் என வலியுறுத்துகின்றனர். அவர்கள் பரிந்துரைகள்:

க} பல்கலை நுழைவு தரவுகளை பெயரில்லாமல் ஆண்டுதோறும் வெளியிட வேண்டும்.
ல்) விண்ணப்பம் முதல் இடமளிப்பு வரை மாணவர்கள் கண்காணிக்கக்கூடிய ஆன்லைன் சிஸ்டம் வேண்டும்.
வி) “Merit” என்ற கொள்கை, அடிப்படை வளங்கள் எல்லா பள்ளிகளுக்கும் சமமாக வழங்கப்பட்ட பின்பு மட்டுமே நடைமுறையில் பொருத்தமாகும்.
சமத்துவம் அரசியல் சொற்பொழிவுகளில் மட்டும் அல்ல, நடைமுறையிலும் வெளிப்படையாக அமல்படுத்தப்பட வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
யார் என்ன சொன்னார்?

துன் ( டத்தோ ஸ்ரீ) டாக்டர் ச.சாமிவேலு (வரலாற்று குரல்)
“கல்வி வாய்ப்பு இல்லாமல் சமூக முன்னேற்றமே சாத்தியமில்லை.”

கணபதிராவ் வீரமான்
“Meritocracy என்ற பெயரில் நம் மாணவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். வெளிப்படைத்தன்மை இல்லாமல் இது தொடர்ந்தால், அது பாகுபாடே ஆகும்.”

டத்தோ சரவணன்
“இந்திய சமூக மாணவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர். Meritocracy என்ற பெயரில் மறைக்கப்படும் அநீதி வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட வேண்டும்.”

டத்தோ நெல்சன் ரெங்கநாதன்
“STPM, மெட்ரிகுலேஷன் சிறந்த மதிப்பெண்கள் பெற்றும் இந்திய மாணவர்களுக்கு இடமில்லை. அரசு உடனடி தீர்வு தர வேண்டும்.”

வேதமூர்த்தி
“இந்திய மாணவர்களின் கல்வி உரிமை பல ஆண்டுகளாகத் தடைகள் விலகாமல் இருந்து வருகிறது. நாம் பேசவில்லை என்றால், இந்த அநீதி தலைமுறைகள் முழுவதும் நிலைத்து விடும்.”
நிறைவு
அரசியல் வசனங்கள் மலராக மலர்கின்றன. ஆனால் இந்திய மாணவர்களின் கையில் முள் மட்டுமே விழுகிறது. வெளியில் கைதட்டல்கள் ஒலிக்க, உள்ளே கல்விக் கனவுகள் மடிகின்றன.
 
																				



















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *