திரைமறைவில் இருந்து செயல்பட வாய்ப்பு கிடைத்துள்ளது!
நூருல் ஈசா இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சந்திர சேகரன் அறைகூவல்!
முன்தோன்றாமல், திரைமறைவிலேயே வேலை செய்ய விருப்பம் கொண்ட பி.கே.ஆர் கட்சியின் புதிய உதவி தலைவராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நூருல் ஈசா, செராஸ் தமிழ்ப்பள்ளி விவகாரத்தை திரைமறைவிலிருந்து தீர்த்து கொடுக்க வேண்டும் என ஜொகூர் மாநில பெரிக்கத்தான் கட்சியின் மலாய்காரர் அல்லாத பிரிவு உச்சமன்ற உறுப்பினர் திரு சந்திர சேகரன் ஆறுமுகம் வேண்டுகோள் விட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு, “திரைமறைவிலிருந்து வேலை செய்யப்போகிறேன். முன்தோன்றாமல் இருப்பதாக இந்திய சமூகத்திற்கு நான் எதையும் செய்யவில்லை என்ற அர்த்தம் கிடையாது. மாறாக திரைமறைவிலிருந்து செயல் படுகிறேன்” என கூறிய நூருல் ஈசா, இப்போது செராஸ் பள்ளிக்கூடம் அருகாமையில் கட்டப்படவுள்ள கட்டுமான பணியை நிறுத்த, இந்த தருணத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இல்லையெனில், நூருல் இந்திய சமூகத்திடம் வெற்று வாக்குறுதி அளித்ததாக அர்த்தம் என்று கொள்ளப்படும்,எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி உன்மைலே தனக்கு இந்தியர்களின் நலன் மீது அக்கறையுள்ளது என நிருபிக்க வேண்டும் என்று பெரிக்கத்தான் நேஷனல் கட்சியின் மலாய்காரர் அல்லாத பிரிவு தலைவரான திரு சந்திர சேகரன் தெரிவித்துள்ளார்.
 
																				



















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *