ஷா ஆலம், செப்டம்பர் 7 – பெர்சத்து ஆண்டு பொதுக்கூட்டத்தில் (AGM) ஏற்பட்ட சலசலப்புக்கு பின்னர், கட்சித் தலைவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசினுக்கு வலுவான ஆதரவு குரல்கள் எழுந்துள்ளன.
மாஸ் எர்மியேதியின் உறுதியான நிலைப்பாடு
பெர்சத்து மகளிர் பிரிவுத் தலைவர் டத்தோ மாஸ் எர்மியாத்தி சம்சுடின், முகைதீனுக்கு எதிரான பதவி விலகல் கோரிக்கைகளை “தனிநபர் செயல்” என்றும், அது “பெர்சத்து உறுப்பினர்களின் உண்மையான நிலைப்பாடு அல்ல” என்றும் விளக்கினார்.
“இத்தகைய சம்பவம் நடந்தது வருத்தமாக உள்ளது. ஆனால், 16வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். தலைமைத்துவத்தைக் குறைக்கும் எந்தச் சலசலப்பும் தவிர்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். மேலும், பெண்கள் பிரிவு (ஸ்ரீகாண்டி) மத்திய மற்றும் அடிமட்டங்களில் ஏற்படும் தலைமை மோதல்களுக்கு மத்தியஸ்தராக செயல்படத் தயார் என்றும் உறுதியளித்தார்.
இளைஞர் பிரிவின் முழு ஆதரவு
பெர்சத்து இளைஞர் தகவல் தலைவர் ஹாரிஸ் இடஹாம் ரஷீத், முகைதீனுக்கு எதிரான நடவடிக்கைகளை “பொருத்தமற்றவை, நியாயமற்றவை” என்று கடுமையாக விமர்சித்தார்.
” கட்சித் தலைவர்,2024-ஆம் ஆண்டு கட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்; அவரது பதவிக்காலம் 2027 வரை நீடிக்கும். தேர்தல் மூலம் வந்த தீர்மானத்தை சட்டப்பூர்வ அறிவிப்புகள் மீற முடியாது,” என்று அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், பெர்சத்து இளைஞர் பிரிவு, முகைதீனை பிரதமர் வேட்பாளராக முழுமையாக ஆதரிக்கிறது என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *