“நேரம் வரும், அது உறுதி – ஆனால் எப்போது?”-நஜீப்

“நேரம் வரும், அது உறுதி – ஆனால் எப்போது?”-நஜீப்

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், சிறை வாழ்க்கையின் நிழற்படங்களை உணர்ச்சிகரமாக வர்ணித்துள்ளார். கோலாலம்பூர், ஆகஸ்ட் 25 –நஜீப்பின் எழுத்துகளில், திரை இரும்பின் பின்னால் அவர் வாழ்க்கையை ஒவ்வொருபொழுதும் எப்படி கடந்து வருகிறார் என்பதை மென்மையான வரிகளில் வண்மையான வலிகளைக் கூறியுள்ளார். அதிகாலை அமைதியில், தொலைவில் கேட்கும் அசான் ஓசை முதல், குளிர் நிறைந்த சிமெண்ட் தரையில் விரிக்கப்பட்டிருக்கும் தாழ்மையான சஜாடா ( தொழுகைப் பாய்) வரை—அவை அனைத்தும் அவரது தினசரி சுஜூத் மற்றும் துவாவின் (தொழுகை)

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், சிறை வாழ்க்கையின் நிழற்படங்களை உணர்ச்சிகரமாக வர்ணித்துள்ளார்.

கோலாலம்பூர், ஆகஸ்ட் 25 –நஜீப்பின் எழுத்துகளில், திரை இரும்பின் பின்னால் அவர் வாழ்க்கையை ஒவ்வொருபொழுதும் எப்படி கடந்து வருகிறார் என்பதை மென்மையான வரிகளில் வண்மையான வலிகளைக் கூறியுள்ளார். அதிகாலை அமைதியில், தொலைவில் கேட்கும் அசான் ஓசை முதல், குளிர் நிறைந்த சிமெண்ட் தரையில் விரிக்கப்பட்டிருக்கும் தாழ்மையான சஜாடா ( தொழுகைப் பாய்) வரை—அவை அனைத்தும் அவரது தினசரி சுஜூத் மற்றும் துவாவின் (தொழுகை) சாட்சிகளாக உள்ளன என்று அவர் கவிதையில் கூறியுள்ளார். கவிதைக்குள் ( செய்திக்குள்) உள்ளே செல்வோம்….

சிறைக் குளிரின் நடுவிலும் தனது நம்பிக்கையைத் தளர விடாமல், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் எழுதிய கவிதை சமூகத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. நஜீப்பின் 3 வருடச்சிறை வாழ்க்கையில் அவரின் மனக்கோடியில் முனு முனுத்துக் கொண்டிருந்த ஏக்கங்களும் நம்பிக்கைகளும்,இரும்பு க் கம்பிகளுக்கு ஊடே எழுத்துருவில் வெளியே வந்து கவிபாடியது ஜடாயூவின் கவனத்தையும் ஈர்த்தது. இங்கே ஜடாயூ ஆசிரியரின் கவிதைக் கண்ணோட்டத்தைத் தந்துள்ளோம்.

மலாய் மொழிக் கவிதையில் கீறியிருந்த சங்கடங்களையும் அதற்குத் துணைபோன சதிகளையும் அவர் கண் முன் கடந்து செல்வதை அவர் கவிதையில் மறைபொழியாகச் செதுக்கியுள்ளார். சிறைவாசம் கொடுமையானது. குளிரும், கட்டாந்தரையும் துன்பத்தைத் தருவதாகவும் அதே சமயத்தில் அதிகாலை ஒலிக்கும் அசானும், தொழுகைப் பாயும் அவரின் நீதிக்கான காத்திருப்புக்கு ஆன்மிகம் பலமாகத் துணை நிற்பதாகவும் அவர் கவிதை பேசியுள்ளது.

அவருடைய உள்ளம் காயங்களால் நிறைந்திருக்கிறது. கடந்த நிகழ்வுகள், தண்டனை, தனிமை – இவை அனைத்தும் மனதைப் புண்படுத்தினாலும், அவர் அதை கடவுளின் சோதனை என ஏற்றுக்கொண்டு, “சம்மதம்” எனும் அல்லாஹ்வின் தீர்ப்பு என ஒப்புதல் என்கிறார்.சிறையில் இருந்தாலும் அவர் தனிமையில் இல்லை. குடும்பத்தினர், ஆதரவாளர்கள், பொதுமக்கள் – இவர்களின் பிரார்த்தனையும் நினைவுகளும் அவருக்குள் வலிமையைக் கொடுக்கின்றன. இது அவர் இன்னும் மக்களிடையே ஆதரவு பெற்றிருப்பதாக உணர வைக்கிறது.

கவிதையின் இறுதியில், “அந்த நேரம் வரும். எப்போது…?” என்ற கேள்வியால் தனது மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார் நஜீப்.

இந்தக் கேள்வி வாசகர்களையும் சிந்திக்கத் தூண்டுகிறது – எப்போது உண்மை வெளிப்படும், எப்போது நீதி நிலைபெறும்? இது நஜிப்-இன் தனிப்பட்ட உணர்வு மட்டுமல்ல, நீதிக்கும் சுதந்திரத்திற்குமான பொதுவான மனிதப் போராட்டத்தையும் நினைவூட்டுகிறது.

நிச்சயம் வரும் ஒரு நாள் என்பதைப் பற்றிய உறுதியும், அதே சமயம் அதற்கான காலத்தைத் தெரியாமல் காத்திருக்கும் ஏக்கமும். ஆகும். இவ்வரிகள் நம்பிக்கையும் குழப்பமும் கலந்த மனநிலையை வெளிப்படுத்துகிறது எதிர்காலத்தில் நீதியின் விடியல் நிச்சயம் உதிக்கும் என்ற உறுதியையும் காட்டுகிறது.

அரசியல் சதிகள், சட்ட நடைமுறைகள், மக்கள் ஆதரவு – இவை அனைத்தையும் நுட்பமாகச் சுட்டிக்காட்டிய இந்தக் கவிதை, நஜிப் இன்னும் போராட்ட மனப்பாங்கோடு இருப்பதை வாசகனுக்கு நினைவூட்டுகிறது.

BILA?

Laungan azan subuh

Sayu, merdu dan indah sekali

Sayup kedengaran

Dari liang di dinding kurungan

Dingin

Berlantai simen

Tikar sejadah menjadi teman

Sujud dan doa

Menenangkan hati

Menjadi tempat luahan

Menjadi tempat mengadu

Pahit di mulut

Mencari keadilan untuk diri

Halangan, kezaliman

Rancangan mereka bertubi-tubi

Luka dan parut di hati

Hanya Allah yang tahu

Hanya Allah yang mengerti

3 tahun berlalu

Doa keluarga

Doa saudara saudari semua

Memberi harapan

Menjadi sumber kekuatan

3 tahun berlalu

Tikar sejadah menjadi teman

Saat itu pasti tiba

Bila…

( Najib Tun Razak)

பரிந்துரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

அண்மை

சிறந்த ஆசிரியர்கள்

அதிக கருத்து

காணொளிகள்

வகையினம்