செப்டம்பர் 7 – 2022 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் ஒற்றுமைக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்த ம.சீ.ச., அப்போது ம.இ.காவுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடமாட்டோம் என்று அறிவித்தது. கெடா, கிளாந்தான், திரங்கானு, பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் கூட தங்கள் பாரம்பரியத் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தாமல் பாரிசான் சார்பாகவே செயல்படுவோம் எனக் கூறியிருந்தது. ஆனால் நடைமுறையில் அந்தத் தொகுதிகளில் பக்காத்தான் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டதால் இரு கட்சிகளும் அரசாங்கப் பதவிகளில் பங்கேற்காமல் விலகின.
இந்த சூழலில் பல முக்கிய தலைவர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் ம.இ.கா மற்றும் ம.சீ.ச.யை விட்டு வெளியேறினர். குறிப்பாக நெகிரி செம்பிலானின் ம.இ.கா தலைவர் டத்தோ மாணிக்கம் பாஸ் கட்சியில் இணைந்தார். கடந்த ஒரு வருடமாக பாரிசான் கூட்டணியில் இரு கட்சிகளும் புறக்கணிக்கப்படுவதாக உள்ளக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், இப்போது ம.சீ.ச. திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி சபா தேர்தலில் பாரிசான் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அதன் தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் அறிவித்துள்ளார்.
இந்த மாற்றத்தை அரசியல் வட்டாரங்கள் “பல்டி” எனக் குறிப்பிடுகின்றன. பாரிசான் கூட்டணியிலிருந்து ம.இ.கா விலகவேண்டும் என்ற கோரிக்கைகள் தொடரும் சூழலில், ம.சீ.ச. தனது இருப்பை உறுதிப்படுத்தும் வகையில் எடுத்த இந்த முடிவு அரசியல் பிளவுகளை மேலும் தீவிரப்படுத்தும் எனக் கூறப்படுகிறது. ம.இ.கா தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வமான எதிர்வினையும் வெளியாகவில்லை.
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *