கோட்டகினபாலு, செப்டம்பர் 7 — சபாவில் அரசியல் பரப்பில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், பார்ட்டி கெமிலாங் அனக் சபா (GAS) தனது வேட்பாளர்களை டெண்டர் முறையின் மூலம் தேர்வு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
கட்சியின் தகவல்படி இதுவரை 286 விண்ணப்பங்கள் வந்துள்ளன. விண்ணப்பதாரர்களிடம் வலுவான கல்வித் தகுதி, குற்றப் பதிவு இல்லாமை, தொகுதி வளர்ச்சிக்கான தெளிவான பார்வை மற்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான மாஸ்டர் திட்டம் என்பன முக்கிய அளவுகோல்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
கட்சித் தலைவர்கள், இந்த முயற்சி வெளிப்படைத்தன்மையையும் திறமை அடிப்படையிலான தேர்வையும் உறுதி செய்வதற்கான முதல்முறையான அரசியல் முயற்சி எனக் கூறுகின்றனர்.
GAS தனது முழுமையான தேர்தல் அறிக்கையையும், வேட்பாளர் பட்டியலையும் வரும் செப்டம்பர் 21 அன்று பியூஃபோர்டில் நடைபெறும் கட்சியின் அதிகாரப்பூர்வ அறிமுக நிகழ்ச்சியில் வெளியிட உள்ளது.
இதற்கு முன்பு, பார்ட்டி தெம்படான் ரக்யாட் சபா (PTRS) கடந்த மார்ச் மாதம் இதே போன்ற டெண்டர் பாணி தேர்வு முறையை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *