கோத்தா பாரு, செப்டம்பர் 16 — பாஸ் கட்சியின் முஸ்லிம் சார்பற்றோர் பிரிவு (DHPP), முஸ்லிம் அல்லாதோரை குறிப்பிட்டுச் சொல்வதில் காபிர் மற்றும் பெண்டாடாங் போன்ற சொற்களை பயன்படுத்த வேண்டாம் என்று கட்சியினருக்கு வலியுறுத்தியுள்ளது.
71-வது பாஸ் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய DHPP, இப்படிப்பட்ட சொற்கள் சமூக ஒற்றுமையை பாதிப்பதோடு, முஸ்லிம் சார்பற்ற சமூகங்களை புறக்கணிப்பதாகக் கருதப்படலாம் என்று தெரிவித்தது.
மேலும், வரவிருக்கும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய (winnable) தொகுதிகளில் தங்களது வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்குமாறு கட்சித் தலைமைக்கு DHPP கோரிக்கை வைத்துள்ளது. இது பாஸ் கட்சியின் நம்பகத்தன்மையை பல்வகை சமூகங்களிடையே உயர்த்த உதவும் என அவர்கள் வலியுறுத்தினர்.
மலேசியாவில் “காபிர்” என்ற சொல் பல காலமாகவே விவாதத்திற்கு உரியதாக உள்ளது. பாஸ் தலைவர்கள் இதை தத்துவச் சொல்லாகக் குறிப்பிடினாலும், விமர்சகர்கள் இதன் பயன்பாடு அவமதிப்பாகவே வெளிப்படுகிறது என்று குற்றம்சாட்டுகின்றனர். அதேபோல், “பெண்டாத்தாங்“( வந்தேறிகள்) என்ற சொல், மலேசியாவில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் சமூகங்களை ‘வெளிநாட்டவர்’ எனக் காட்டுகிறது என்பதால் விமர்சிக்கப்படுகிறது.
அரசியல் விமர்சகர்கள் DHPP வின் இந்தக் கோரிக்கை, பாஸ் தனது பாரம்பரிய மலாய்-முஸ்லிம் ஆதரவாளர்களைத் தாண்டி, விரிவான சமூக ஆதரவை பெற விரும்பினால் அதன் அரசியல் பேச்சுத்தேர்வில் மிதத்தன்மை கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை காட்டுகிறது எனக் கூறுகிறார்கள்
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *